பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இரு போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும்,  2 விமானிகளை கைது செய்துள்ளதையும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. 

புல்வாமா தாக்குதலையடுத்து இந்திய விமானப்படை அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் தரப்பிலும் எச்சரிக்கை விடக்கப்பட்டது. இதனால் எல்லையில் உச்சக்கட்ட போர் பதற்றம் நீடித்து வருகிறது. 

இதனிடையே பாகிஸ்தான் எல்லைக்குள் இன்று நுழைந்த இரு போர் விமானங்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சுட்டு வீழ்த்தப்பட்ட இரு விமானங்களில் ஒன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் கோஹி ரட்டா பகுதியில் விழுந்து தீப்பற்றி எரியும் காட்சிகளை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. மேலும் மற்றொரு விமானம் இந்தியாவின் எல்லைக்குள் வீழ்த்தியதாக தகவல் தெரிவித்தது. ஆனால் இந்தியா தரப்பில் இந்த தகவலை முற்றிலுமாக மறுத்து வந்தது. 

இதற்கிடையே பாகிஸ்தான் பகுதிக்குள் விழுந்த இந்திய போர் விமானத்தில் இருந்த விமானிகள் இருவரை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவத்தினர் தெரிவித்திருந்தனர். மேலும் கைதான இந்திய விமானி அபிநந்தன் பெயர் மற்றும் விமானப்படையில் தனது அடையாள எண் ஆகியவற்றை வீடியோவுடன் பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. விமானி அபினந்தன் பாகிஸ்தானில் பிடிப்பட்டதை இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.