போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம், இந்திய நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீது தாக்‍குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவத்தினரும் தக்‍க பதிலடி கொடுத்து வருகின்றனர். 

எல்லைக்‍கட்டுப்பாடு கோடு அருகே Pallanwala பகுதி மற்றும் ரஜோரி மாவட்டம் Manjakote பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் பயங்கர துப்பாக்‍கிச்சூடு நடத்தியுள்ளது. இதற்கு, இந்திய ராணுவத்தினரும் தக்‍க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

எல்லையில், கடந்த 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மட்டும் இதுவரை 12 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்‍குதல் நடத்தியுள்ளது. இதில், 4 பேர் உயிரிழந்ததுடன், எல்லையோரத்தில் இருந்த ஆயிரக்‍கணக்‍கான மக்‍கள் பாதுகாப்பான இடங்களுக்‍கு வெளியேறியுள்ளனர். பாகிஸ்தானின் இந்த தொடர் அத்துமீறலுக்‍கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள இந்தியா, எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் உதவி வருவதாக குற்றம்சாட்டியுள்ளது.

இதனிடையே, ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஜூலை மாதம் 9-ம் தேதி, ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத புர்கான் வானி சுட்டுக்‍கொல்லப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வன்முறை காரணமாக, ரயில் சேவை முற்றிலும் முடங்கி போனது. இந்நிலையில், கடந்த 132 நாட்களுக்கு பிறகு முதற்கட்டமாக பத்காம் முதல் ஸ்ரீநகர் வரை ரெயில் சேவை பலத்த பாதுகாப்புடன் தொடங்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களும், பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.