பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கடுமையாகக் கண்டித்துள்ளார். இது ஒரு அருவருப்பான, மிக மோசமான மனிதாபிமானமற்ற செயல் என்றும், சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்களை நோக்கி நடத்தப்பட்ட எந்தத் தாக்குதலையும் விட மிகப் பெரியது என்றும் அவர் கூறினார்.

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கடுமையாகக் கண்டித்துள்ளார். இது ஒரு அருவருப்பான, மிக மோசமான மனிதாபிமானமற்ற செயல் என்று அவர் கூறினார். பஹல்காம் தாக்குதல் சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்களை நோக்கி நடத்தப்பட்ட எந்தத் தாக்குதலையும் விட மிகப் பெரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

"நான் நம்பமுடியாத அளவுக்கு அதிர்ச்சியடைந்தேன். பொதுமக்கள் மீதான இந்தத் தாக்குதல் அருவருப்பானது. குற்றவாளிகள் விலங்குகள், மனிதாபிமானமற்றவர்கள், அவமதிப்புக்குத் தகுதியானவர்கள். கண்டனம் தெரிவிக்க போதுமான வார்த்தைகளே போதவில்லை" என்று அப்துல்லா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்ட அவர் உடனடியாக ஸ்ரீநகருக்குத் திரும்புவதாகக் கூறினார்.

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: காஷ்மீரில் இன்று முழு அடைப்பு போராட்டம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்- தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் பஹல்காம்..தேடுதல் நடவடிக்கைகள் தீவிரம்

மிகப்பெரிய தாக்குதல்:

காயமடைந்தவர்களுக்கு ஏற்பாடுகளை மேற்பார்வையிட சுகாதாரத்துறை அமைச்சர் சகா சகினா இட்டூ மருத்துவமனைக்கு விரைந்ததாக உமர் கூறினார்.

"இறப்பு எண்ணிக்கை உறுதி செய்யும் பணி நடந்து வருகிறது. நிலைமை தெளிவாகும்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்" என்று கூறிய உமர் அப்துல்லா, இந்த தாக்குதல் சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்களை நோக்கி நடத்தப்பட்ட மிகப் பெரியத் தாக்குதல் என்பதைச் சொல்லவே தேவையில்லை.

Scroll to load tweet…

பஹல்காம் துப்பாக்கிச்சூடு:

பஹல்காமில் உள்ள அழகிய புல்வெளியான பைசரனில் இந்த தாக்குதல் நடந்தது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் துப்பாக்கி ஏந்திய அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 12 சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் நடந்த புல்வெளிக்கு நடந்தோ குதிரைகள் மூலமோ செல்ல மட்டுமே முடியும். துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்ட சிறிது நேரத்திலேயே பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்தை அடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக வெளியேற்றும் முயற்சிகள் தொடங்கப்பட்டன.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மத ரீதியான முழக்கங்களை எழுப்பியதாக தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். துப்பாக்கி ஏந்திய நபர், "நீங்கள் ஒரு முஸ்லிம் இல்லை" என்று கூறி தனது கணவரை நோக்கிச் சுட்டதாகக் ஒரு பெண் கூறியுள்ளார்.

Pahalgam Attack : சவுதி பயணத்தை நிறுத்தி விட்டு அவசர அவசரமாக நாடு திரும்பும் பிரதமர் மோடி!