பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து, புதன்கிழமை ஜம்மு காஷ்மீரில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. JKNC, PDP, JKSA, ஹுரியத் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புதன்கிழமை ஜம்மு காஷ்மீரில் முழு அடைப்புபக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளன.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆதரவு காட்டும் விதமாக, பந்த் முழு வெற்றியடையச் செய்யுமாறு ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு (JKNC) கட்சி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த பந்த் வெறும் போராட்டம் மட்டுமல்ல, வன்முறைக்கு எதிரான வலி மற்றும் சீற்றத்தின் கூட்டு வெளிப்பாடு என்று அக்கட்சி வலியுறுத்தியது.

"பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டிக்கும் வகையில், நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தில் ஜே.கே.என்.சி இணைகிறது. மத மற்றும் சமூகத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ள ஹர்த்தாலை முழுமையாக வெற்றிபெறச் செய்யுமாறு ஜே.கே.என்.சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்," என்று ஜே.கே.என்.சி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதல் மனிதாபிமானமற்ற செயல்: உமர் அப்துல்லா கண்டனம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்- தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் பஹல்காம்..தேடுதல் நடவடிக்கைகள் தீவிரம்

மெஹ்பூபா முஃப்தி கண்டனம்:

ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி (PDP) தலைவரும் முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தியும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு தங்கள் கட்சி ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதல் நம் அனைவரின் மீதான தாக்குதல் என்றும் அவர் கூறியுள்ளார்.

"பஹல்காமில் நடந்த கொடூரமான தாக்குதலில் இழந்த அப்பாவி உயிர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இந்த பந்தை ஆதரிக்க அனைத்து காஷ்மீரிகளும் ஒன்றுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது ஒரு சிலரின் மீதான தாக்குதல் மட்டுமல்ல - இது நம் அனைவரின் மீதான தாக்குதல்" என்று முஃப்தி தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாணவர் சங்கம் ஆதரவு:

ஜம்மு-காஷ்மீர் மாணவர் சங்கம் (JKSA) இந்த தாக்குதலை "ஜம்மு-காஷ்மீரின் ஆன்மாவின் மீதான தாக்குதல்" என்று கூறியதுடன், பந்திற்கு தனது ஆதரவையும் தெரிவித்துள்ளது. "பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, ஜம்முவில் உள்ள வழக்கறிஞர் சங்கம் நாளை அழைப்பு விடுத்துள்ள பந்தை JKSA முழுமையாக ஆதரிக்கிறது. இந்த துயரமான தாக்குதல் ஒரு சில தனிநபர்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல; இது ஜம்மு & காஷ்மீரின் ஆன்மாவின் மீதான தாக்குதல்" என்று கூறியுள்ளது.

ஹுரியத் மாநாட்டுக் கட்சி ஆதரவு:

ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் தலைவர் மிர்வாய்ஸ் உமர் ஃபரூக், ஜம்மு காஷ்மீர் மக்கள் இந்த முழு அடைப்பு போராட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்றும், கொடூரமான குற்றத்திற்கு எதிராக அமைதியான முறையில் போராட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Pahalgam Attack : சவுதி பயணத்தை நிறுத்தி விட்டு அவசர அவசரமாக நாடு திரும்பும் பிரதமர் மோடி!