ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு PAFF பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றதோடு, தாக்குதல் தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு PAFF பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றதோடு, தாக்குதல் தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் ரஜோரி செக்டாரில் பிம்பர் காலி என்ற இடத்தில் இருந்து பூஞ்ச் சங்கியோடி பகுதிக்கு வீரர்களுடன் சென்றுக்கொண்டிருந்த ராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதையும் படிங்க: லண்டனில் ஜெகன்நாத் கோவில்! ரூ.250 கோடி நன்கொடை வழங்கிய ஒடிசா தொழிலதிபர்!
மூன்று திசைகளில் இருந்து நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் வாகனம் தீப்பற்றியது. இதில் வாகனத்தில் இருந்த ஹவில்தார் மன்தீப் சிங், லான்ஸ் நாயக் தேபாஷிஷ் பஸ்வால், லான்ஸ் நாயக் குல்வந்த் சிங், சிபாய் ஹர்கிரிஷன் சிங் மற்றும் சிபாய் சேவக் சிங் ஆகிய 5 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: நிப்பானியை பிடிக்கப்போவது யார்? காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி!
எரிபொருள் டேங்க் உள்ளே இருந்து வெடித்தது என்பதும், வாகனத்தின் மீது கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தியபோதும், டிரக்கை வெடிக்கச் செய்ய பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளைப் பயன்படுத்தினர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையே இந்த சம்பவத்திற்கு PAFF பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றதோடு, தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து விவரிக்கும் படங்களையும் வெளியிட்டுள்ளது.
