Asianet News TamilAsianet News Tamil

உ.பியில் பாஜகவின் வெற்றிக்குப் பாடுபட்ட மாயாவதி, ஒவைசிக்கு பத்ம விபூஷன், பாரத ரத்னா விருது: சிவசேனா விளாசல்

உத்தரப்பிரதேசத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்காக உழைத்த பகுஜன் சமாஜ் கட்சித் த லைவர் மாயாவதி, ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஒவைசி ஆகியோருக்கு பத்மவிபூஷன், பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று சிவசேனா கட்சி விளாசியுள்ளது.

Padma Vibhushan, Bharat Ratna For Mayawati, Owaisi: Sena
Author
Mumbai, First Published Mar 11, 2022, 5:46 PM IST

உத்தரப்பிரதேசத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்காக உழைத்த பகுஜன் சமாஜ் கட்சித் த லைவர் மாயாவதி, ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஒவைசி ஆகியோருக்கு பத்மவிபூஷன், பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று சிவசேனா கட்சி விளாசியுள்ளது.

5 மாநிலத்தேர்தல்

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களிலும் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 4 மாநிலங்களில் அமோக வெற்றி பெற்று 2-வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. இதில் 36 ஆண்டுகளில் இல்லாதவகையில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக தொடர்ந்து 2-வது முறையாக வென்று ஆட்சி அமைக்கிறது. 

Padma Vibhushan, Bharat Ratna For Mayawati, Owaisi: Sena

சமாஜ்வாதிக் கட்சி

இந்தத் தேர்தலில் மொத்தம் 403 தொகுதிகளில் பாஜக 273 தொகுதிகளில் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. 2-வது பெரிய கட்சியாக அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதிக் கட்சி 111 இடங்களில் வென்றுள்ளது. இதில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 12.8% வாக்குகளைப் பெற்று ஒரு இடத்திலும், ஒவைசியின் கட்சி 0.49% வாக்குகள் பெற்று ஒரு இடத்திலும் வெல்லவில்லை.

பாஜக பி டீம்

தேர்தலில் தோல்வி அடைந்தபின் மாயாவதி அளித்த பேட்டியில், “ பகுஜன் சமாஜ் கட்சியை பாஜகவின் பி டீம் என்று கூறிய ஊடங்களை கடுமையாக விமர்சித்தார். பாஜகவை வீழ்த்திய ஒரே கட்சி பகுஜன் சமாஜ் கட்சிதான் என ஆவேசமாகத் தெரிவித்தார்

ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஒவைசி அளித்த பேட்டியில் “ மக்களின் முடிவை மதிக்கிறேன். உ.பியில் உள்ள சிறுபான்மை மக்கள் வாக்குவங்கிகளாகப் பயன்படுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவித்தார்

Padma Vibhushan, Bharat Ratna For Mayawati, Owaisi: Sena

பாரத ரத்னா, பூஷன் விருது

இந்நிலையில் உபியில் பாஜக வென்றது குறித்து சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் காட்டமாக விமர்சித்துள்ளார். மும்பையில் நிருபர்களுக்கு சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில் கூறுகையில் “ உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. உ.பி. இன்னும் பாஜகவின் மாநிலமாக இருக்கிறது. அகிலேஷ் யாதவ் வாக்கு, வெற்றி பெற்ற இடங்கள் 3 மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த தேர்தலில் 42 இடங்களில் வென்றவர் இந்தமுறை 125 இடங்களில் வென்றுள்ளார். மாயாவதி, ஒவைசி பாஜகவின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் பத்மவிபூஷன், பாரத ரத்னா விருது வழங்கிட வேண்டும்.

Padma Vibhushan, Bharat Ratna For Mayawati, Owaisi: Sena

முதல்வர்கள் தோல்வி

பாஜக 4 மாநிலங்களில் வென்றாலும்கூட, உத்தரகாண்ட் முதல்வர் தோல்வி அடைந்துவிட்டார், கோவாவில் இரு துணை முதல்வர்கள் தோற்றனர், பஞ்சாப்பில் பாஜகவை முற்றிலும் மக்கள் புறக்கணித்துவிட்டார்கள். 

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர், ஒவ்வொருவரும் பஞ்சாப்பில் தீவிரமாக பிரச்சாரம் செய்தார்கள். அவ்வாறு பிரச்சாரம் செய்தும் ஏன் தோற்றார்கள். உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவாவில் பாஜக ஏற்கெனவே பாஜக ஆட்சிஇருந்தது. ஆனால் பஞ்சாப்பில் காங்கிரஸ், உ.பியில் சிவசேனா தோல்விஅடைந்ததைவிட மோசமாக பாஜக தோற்றுவிட்டது” எனத் தெரிவித்தார்

Padma Vibhushan, Bharat Ratna For Mayawati, Owaisi: Sena

குற்றச்சாட்டு

பகுஜன் சமாஜ் கட்சியும், ஏஐஎம்ஐஎம் கட்சிகள் பாஜகவுக்கு பி டீம். பாஜகவுக்கு எதிரான வாக்குகளைப் பிரிக்கவே இவர்கள் போட்டியிடுகிறார்கள் என்று குற்றச்சாட்டு அரசியல் தளங்களில் வைக்கப்படுகிறது. ஆனால் இந்தக் கருத்தை இரு கட்சிகளுமே தொடர்ந்து மறத்துவருகின்றன

Follow Us:
Download App:
  • android
  • ios