நடுவானில் சூடான பயணியின் மொபைல் போன்! அவசரமாக திரும்பிச் சென்ற ஏர் இந்தியா விமானம்!
பயணி ஒருவரின் மொபைல் போன் சார்ஜ் செய்யும்போது அதிக வெப்பமடைவதைக் கண்டு விமான பணியாளர்களை எச்சரித்துள்ளனர்.
திங்கள்கிழமை உதய்பூரிலிருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானம் பயணியின் மொபைல் ஃபோன் சார்ஜரில் கோளாறு ஏற்பட்டதால், மீண்டும் விமான நிலையத்திற்கே திரும்பியது.
இதனால் ஏர் இந்தியா நிறுவனத்தின் AI 470 விமானம் குறைந்தது ஒரு மணிநேரம் தாமதமாகி பின்னர் டெல்லிக்கு புறப்பட்டது என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறினார்.
கோழி ரத்தத்தைப் பூசிக்கொண்டு தொழிலதிபர் மீது போலியாக பாலியல் புகார் கூறிய பெண்!
பயணி ஒருவரின் மொபைல் போன் சார்ஜ் செய்யும்போது அதிக வெப்பமடைவதைக் கண்டு விமான பணியாளர்களை எச்சரித்துள்ளனர். இதையடுத்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் மீண்டும் விமான நிலையம் நோக்கித் திரும்பியது.
இருப்பினும், விமானத்தில் புகை மூண்டதைக் கண்டதாக உதய்பூர் விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கான காரணத்தை உடனடியாகக் கண்டறிய முடியவில்லை என்றாலும், ஒரு பயணியின் பவர் பேங்கில் சிக்கல் ஏற்பட்டதுதான் காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
ஒரு பயணியின் மொபைல் போன் சூடானதால் விமானம் ஒரு மணிநேரம் தாமதம் அடைந்தது அந்த விமானத்தில் சென்ற பயணிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விமான நிலையம் மற்றும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சார்பில் விசாரணை தொடர்ந்து நடப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.
அமைச்சர் ஜெய்சங்கர் உட்பட 11 பேருக்கு போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினர் பதவி