நொய்டாவில் நீரில் மூழ்கிய 400 க்கும் மேற்பட்ட கார்கள்! உ.பி. ஹிண்டன் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்!
யமுனையில் அபாய அளவைவிட சற்று அதிகமான நீர்மட்டம் காணப்படும் நிலையில் யமுனையின் துணை நதியான ஹிண்டன் ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாயும் யமுனையின் துணை நதியான ஹிண்டன் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து கிரேட்டர் நொய்டாவில் உள்ள கார் குடோனில் 400க்கும் மேற்பட்ட கார்கள் மேற்கூரை வரை நீரில் மூழ்கி கிடக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
கிரேட்டர் நொய்டாவில் உள்ள சுதியானா கிராமத்திற்கு அருகில் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டும் வீடியோவில், வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும் வெள்ளை நிற கார்கள் அவற்றின் மேற்கூரை மட்டுமே தெரியும் நிலையில் நீரில் மூழ்கி இருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
காப்புரிமை மீறல்... X என்று பெயரை மாற்றி பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்ட எலான் மஸ்க்!
இன்று பிற்பகல் 3 மணியளவில் ஹிண்டனின் நீர்மட்டம் திடீரென உயர்ந்து, வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீர் கார் குடோனுக்குள் புகுந்துவிட்டது. இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்ததாக நூற்றுக்கணக்கான கார்கள் நீரில் மிதக்கும் நிலையில் உள்ளன. நீரில் மூழ்கியிருப்பவை காப்பீட்டுத் தொகையை செலுத்தாததால் பறிமுதல் செய்யப்பட்ட கார்கள் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆற்றுக்கு அருகில் உள்ள வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் சிக்கியுள்ள கிராம மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர். நொய்டா மற்றும் தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலையில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இன்று நண்பகல் நிலவரப்படி, யமுனை நதியின் நீர்மட்டம் அபாய அளவான 205.33 மீட்டரை விட சற்று அதிகரித்து 205.4 மீட்டர் ஆக இருந்தது.
மணிப்பூரில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த எல்லை பாதுகாப்புப் படை வீரர்... வீடியோ வெளியானதும் சஸ்பெண்ட்!
"டெல்லியைப் பொறுத்தவரை, குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு எச்சரிக்கை இல்லை. ஆனால் அதிக ஈரப்பதம் மற்றும் அதிக வெப்பநிலையை தொடர்ந்து எதிர்பார்க்கலாம். லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கூறியுள்ளது.
மகாராஷ்டிரா, ஹரியானா, சண்டிகர், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சவுராஷ்டிரா-கட்ச் பகுதி, மத்திய மகாராஷ்டிரா, கோவா மற்றும் கடலோர கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் குஜராத்தில் மழை குறைந்துள்ளதால், அந்த மாநிலத்தில் வெள்ள நிலைமை சீரடைய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
மிரட்டும் மெர்ஸ் கோரோனா வைரஸ்! ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை! உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை