உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வருவது தான் எங்களின் ஒரே எண்ணம் என்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வருவது தான் எங்களின் ஒரே எண்ணம் என்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைன் தலைநகரான கீவ் நகரை சுற்றிவளைத்து ரஷ்ய வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 7 நாட்களை கடந்து போர் நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது. போரை முடிக்கு கொண்டுவரும் வகையில் உக்ரைன் - ரஷ்யா இடையே பெலாரஸ் நாட்டின் கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடந்தது. இரு நாடுகளை சேர்ந்த உயர்நிலை தூதுக்குழு அதிகாரிகள் மட்டத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையின்போது, போரை உடனடியாக நிறுத்திவிட்டு ராணுவத்தை வெளியேற்றும்படி ரஷ்யாவுக்கு உக்ரைன் கோரிக்கை விடுத்தது. முதல் சுற்று பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தது. தொடர்ந்து அங்கு தாக்குதல்கள் நடந்து வருகின்றன. 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்யா நேற்று அறிவித்துள்ளது.

ரஷ்யாவுடன் 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக உக்ரைன் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து 8வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது வரை 18,000 இந்தியர்கள் உக்ரைனை விட்டு வெளியேறி உள்ளனர் என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தகவல் தகவல் தெரிவித்தார். இதுக்குறித்து பேசிய அவர், ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் 30 விமானங்களில் தற்போது வரை 6,400 பேர் தாயகம் திரும்பியுள்ளனர் என கூறினர். அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியர்களை அழைத்து வர 18 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு விமானங்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தியுள்ளோம். உக்ரைனின் அண்டை நாடுகளில் உள்ள இந்தியர்கள் அனைவரையும் விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளை முடக்கிமேற்கோண்டு வருகிறோம். வரும் 2-3 நாட்களுக்கு அதிக அளவில் விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளோம்.

அப்போது ஏராளமான இந்தியர்கள் வீடு திரும்புவார்கள். இந்த போர் சமயத்திலும் உக்ரைன் அரசு இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவியதற்கு பாராட்டுக்கள். இந்திய மக்களுக்காக எல்லைகளை திறந்து அண்டை நாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தார். எங்களின் எச்சரிக்கையை தொடர்ந்து ஏராளமான இந்திய மாணவர்கள் கார்கிவ்வில் இருந்து வெளியேறியுள்ளனர். மேற்கு உக்ரைனில் எல்லையை கடக்க காத்திருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற தொடர்ந்து உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது. ஆரம்பத்தில் 20,000 இந்தியர்கள் தூதரகத்தில் பதிவு செய்தனர், கார்கிவ் இன்னும் சில நூறு இந்தியர்கள் இருக்கலாம் என நினைக்கிறோம், அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது தான் எங்களின் முன்னுரிமை. உக்ரைன் மற்றும் ரஷ்யாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம், எங்களின் ஒரே எண்ணம் இந்தியர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வருவது தான் என்று தெரிவித்துள்ளார்.
