Asianet News TamilAsianet News Tamil

மிக மிக மிக நல்ல செய்தி... இந்தியா வரும் 70 லட்சம் கருவிகள்... கொரோனாவுக்கு விரைவில் ஊதப்படும் சங்கு..!

சுமார் 70 லட்சம் கொரோனா சோதனை கிட்டுகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளதாகவும் அவை எந்த நேரத்திலும் இந்தியா வந்தடையும் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
 
Order 70 lakh Corona test kits
Author
India, First Published Apr 15, 2020, 2:47 PM IST
சுமார் 70 லட்சம் கொரோனா சோதனை கிட்டுகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளதாகவும் அவை எந்த நேரத்திலும் இந்தியா வந்தடையும் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.Order 70 lakh Corona test kits

 இவற்றில் 33 லட்சம் பிசி ஆர் கிட்டுகளும். 37 லட்சம் ரேபிட் ஆண்டிபயாடீஸ் கிட்டுகளும் உள்ளன. கொரோனா ஹாட் ஸ்பாட்டுகளில் பிசிஆர் கிட்டுகளோடு சேர்ந்து பயன்படுத்தவேண்டிய ரேபிட் ஆண்டிபயாடிக் கிட்டுகள் சென்ற வாரமே வந்திருக்க வேண்டும் எனவும், வேறு சில காரணங்களால் தாமதம் ஏற்பட்டு விட்டதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது. தற்போது 6 வாரங்களுக்கு தேவையான பேசிக்கிட்டு களிப்பில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளதுOrder 70 lakh Corona test kits

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக ரூ. 8 கோடி மதிப்புள்ள 40,032 பிசிஆர் கருவிகளை டாடா நிறுவனம் வழங்கியுள்ளது. இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக ஆயிரம் என்ற அளவில் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை 1,204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 10 வயதுக்குட்பட்ட 33 குழந்தைகளுக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 38,139 போ் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனா். இதுவரை மொத்தம் 15,502 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், கொரோனா சோதனைக்கு தேவையான ரேபிட் கிட், பி.சி.ஆர். கருவிகள் பற்றாகுறையாக உள்ளதால் அரசு திணறி வருகிறது. Order 70 lakh Corona test kits

சுமார் 70 லட்சம் கொரோனா சோதனை கிட்டுகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளதாகவும் அவை எந்த நேரத்திலும் இந்தியா வந்தடையும் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது பெரும் ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது. 
 
Follow Us:
Download App:
  • android
  • ios