மணிப்பூருக்கு அனைத்துக் கட்சி குழுவை அனுப்ப வேண்டும்: டெல்லி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
மணிப்பூர் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக தலைநகர் டெல்லியில் அமித் ஷா தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
மணிப்பூரில் கள நிலவரத்தை ஆராய்வதற்காக அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் கொண்ட குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கோரிக்கையை வைத்துள்ளனர்.
இன்று (சனிக்கிழமை) தலைநகர் டெல்லியில் உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். திமுக சார்பில் எம்.பி. திருச்சி சிவாவும், அதிமுக சார்பில் எம்.பி. தம்பிதுரையும் பங்கேற்றனர். பிரதமர் கலந்துகொள்ளாத்தைக் காரணமாகக் கூறி, காங்கிரஸ் கட்சி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் புறக்கணித்தது.
சுமார் இரண்டு மணிநேரம் நீடித்த இந்தக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. திரு்ச்சி சிவா, இத்தனை நாட்களாக வன்முறை தொடரும் நிலையிலும் மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி எதுவும் பேசாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது என்று குறிப்பிட்டார். மத்திய அரசு மணிப்பூரில் அமைதியைக் கொண்டுவர அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட மாநிலத்திற்கு ஒரு வாரத்திற்குள் அனைத்துக் கட்சிக் குழுவை அனுப்ப வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கலந்துகொண்ட டெரிக் ஓ பிரையன் வலியுறுத்தியுள்ளார். இந்தக் கோரிக்கை மற்ற எதிர்க்கட்சியினரும் வழிமொழிந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாழ்க்கையை மாற்றிய கனடா லாட்டரி! 35 மில்லியன் டாலர் வென்ற இவர் யாரு தெரியுமா?!
கடந்த மே மாதம் 3ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவரும் வன்முறைச் சம்பவங்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இன்டர்நெட் சேவையும் முடக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் மாநிலத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். இச்சூழலில் மணிப்பூர் நிலவரம் குறித்து நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி இன்றுவரை ஒரு வார்த்தைகூட கூறவில்லை.
அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், அண்மையில் ஒலிபரப்பான அவரது மன் கீ பாத் வானொலி உரையைப் புறக்கணித்த மணிப்பூர் மக்கள் பிரதமர் பேசத் தொடங்கியதும் ரேடியோ பெட்டிகளை உடைத்தும் எரித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
குழந்தையை அவருகிட்ட விடக்கூடாது... பேஸ்புக் லைவ் வீடியோவில் புலம்பிவிட்டு இளம்பெண் தற்கொலை!