ஆபரேஷன் காவேரி மீட்பு பணியில் உள்ள ஒரே பெண்… யார் இந்த ராஜ் கவுர் போபராய்?
C-17 Globemaster போக்குவரத்து விமானத்தின் முதல் மற்றும் ஒரே பெண் விமானியான விமான லெப்டினன்ட் ஹர் ராஜ் கவுர் போபராய், சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் ஆபரேஷன் காவேரி மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.
C-17 Globemaster போக்குவரத்து விமானத்தின் முதல் மற்றும் ஒரே பெண் விமானியான விமான லெப்டினன்ட் ஹர் ராஜ் கவுர் போபராய், சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் ஆபரேஷன் காவேரி மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே அவர் மக்களை மீட்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில், அவர், ஒரு பெண்ணுக்கு விமானத்தில் ஏற உதவுவதை காணலாம். C-17 Globemaster என்பது இந்திய விமானப்படையின் கனரக விமானம் ஆகும். இந்த பணியின் ஒரு பகுதியாக, இந்திய விமான படை, இரண்டு C-130J சூப்பர் ஹெர்குலிஸ் மற்றும் ஒரு C-17 Globemaster III ஆகியவற்றை ஆப்ரேஷன் காவிரிக்கு அனுப்பியுள்ளது.
இதையும் படிங்க: காங்கிரஸ் வந்தால் கலவரம் வரும்! அமித் ஷா பேச்சுக்கு குறித்து காங்கிரஸ் புகார்
இதுவரை, இரண்டு C-130J விமானங்கள் மொத்தம் 520 இந்தியர்களை சூடானில் இருந்து மீட்டு சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் விட்டுள்ளது. C-17 போக்குவரத்து விமானம் கடந்த வியாழக்கிழமை 246 பேரை ஜெட்டாவிலிருந்து மும்பைக்கு அழைத்து வந்தது. புதன்கிழமை, 360 இந்தியர்களைக் கொண்ட முதல் குழு ஒரு விமானத்தில் கொண்டு டெல்லிக்கு அழைத்து வரப்பட்டன. இதுக்குறித்து இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர் கூறுகையில், விமான லெப்டினன்ட் ஹர் ராஜ் கவுர் போபராய் ஒரு C-17 பைலட் ஆவார்.
இதையும் படிங்க: ஏர் இந்தியா விரிவாக்கம்! 470 புதிய விமானங்களை இயக்க 1000 விமானிகளுக்குப் பணி வாய்ப்பு
அவர் தற்போது ஆபரேஷன் காவேரியின் ஒரு பகுதியாக உள்ளார். மேலும் அவர், C-17 ஐ ஓட்டிய இந்திய விமானப்படையின் முதல் மற்றும் ஒரே பெண் அதிகாரி ஆவார். விமானத்தின் படைப்பிரிவில் உள்ள ஒரே பெண் அதிகாரியும் அவர்தான். காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை நிலையத்தில் C-17 விமானங்களின் படை உள்ளது. பஞ்சாபில் உள்ள பாட்டியாலாவைச் சேர்ந்த விமான லெப்டினன்ட் போபராய், 2019 இல் படையில் நியமிக்கப்பட்டார் என்று தெரிவித்துள்ளார்.