Asianet News TamilAsianet News Tamil

ONE TIME Rs.4000 என குறிப்பிடாவிட்டால் உங்கள் பெயரில் மோசடி நடக்கும் – பொதுமக்களே உஷார்

one time-use-mentioned-application
Author
First Published Nov 13, 2016, 2:26 AM IST


ஒருமுறை மட்டும் பணம் எடுப்பதாக குறிப்பிடாவிட்டால், உங்கள் பெயரில் மோசடி நடக்கும் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதையெடுத்து பணத்தை மாற்ற முடியாமல் மக்கள் தவித்தனர். பின்னர், வரும் டிசம்பர் 30ம் தேதி வரை, அனைத்து தபால் நிலையங்கள், வங்கிகள் மூலம் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

one time-use-mentioned-application

ஆனால், வங்கிகளில் பணத்தை மாற்றும்போது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றின் நகல் கொண்டு செல்ல வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் மட்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதனால், பொதுமக்கள் தங்களிடம் உள்ள பணத்தை, வங்கியில் கொடுத்து மாற்றுவதற்காக படையெடுத்து செல்கின்றனர்.

வங்கிகளுக்கு படித்தவர்கள் மட்டுமின்றி, படிக்காத பாமர மக்களும் செல்கின்றனர். இவ்வாறு செல்பவர்களிடம் ஒரு படிவத்தை கொடுத்து, அதனை பூர்த்தி செய்த பிறகே பணம் தரமுடியும் என வங்கி ஊழியர்கள் கூறுகின்றனர். இதனால், படிக்க தெரியதவர்களின் நிலை கடும் திண்டாட்டம் ஆகிறது.

இந்நிலையில், வங்கி மற்றும் தபால் நிலையங்களில், பழைய பணத்தை கொடுத்து ரூ.4000 வாங்கும்போது, பொதுமக்களின் அடையாள அட்டையை கொடுப்பதால், மீண்டும் கருப்பு பணம் வெளியாகும் என புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

one time-use-mentioned-application

இதுகுறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், பொதுமக்கள் தங்களது பழைய பணத்தை மாற்றுவதற்கு, ஆதார், வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணை குறிப்பிட்டு விண்ணப்பத்தில் தருகின்றனர். அதில், ஒருமுறை மட்டும் பணம் எடுக்கிறேன் என எழுதி கொடுக்க வேண்டும்.

ஆனால், அப்படி எழுதாமல் விண்ணப்ப படிவத்தை கொடுப்பதால், வங்கி ஊழியர்களின் துணையோடு, அடுத்த 40 நாட்களுக்குள் தினமும் ரூ.4000 எடுக்க முடியும். இப்படி ஒரு அடையாள அட்டையை வைத்து 1 லட்சத்து 60 ஆயிரம் வரை பார்த்துவிடுவார்கள்.

ஒரு வங்கி கிளையில் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களின் ஆதார் எண்ணை வைத்தால, ரூ.160 கோடி வரை மீண்டும் கருப்பு பணம் வெளியே வர வாய்ப்புள்ளது. இதனை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios