Asianet News TamilAsianet News Tamil

மேலும் ஒரு சிறுத்தை மரணம்.. கடந்த 4 மாதத்தில் இது எட்டாவது முறை - Project Cheetah திட்டத்தில் பின்னடைவு!

இன்று வெள்ளிக்கிழமை காலை அதிகாரிகள் தேசிய பூங்காவில் இறந்த அந்த ஆப்பிரிக்க சிறுத்தையின் உடலை கண்டெடுத்துள்ளனர்.

One more cheetah died in MP kuno national park makes 8 death in 4 months
Author
First Published Jul 14, 2023, 5:15 PM IST

மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் ஒரு சிறுத்தை உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு மாதங்களில் நடக்கும் எட்டாவது இறப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் துவங்கி வைக்கப்பட்ட திட்டம் தான் "Project Cheetah" தற்பொழுது அந்த திட்டத்தில் மாபெரும் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.

இன்று வெள்ளிக்கிழமை காலை அதிகாரிகள் தேசிய பூங்காவில் இறந்த அந்த ஆப்பிரிக்க சிறுத்தையின் உடலை கண்டெடுத்துள்ளனர். இதுவரை அது இறப்பு குறித்த காரணம் வெளியிடப்படவில்லை, கடந்த செவ்வாய்க்கிழமை தேஜஸ் என்று அழைக்கப்பட்ட ஒரு ஆண் சிறுத்தை இறந்து கிடந்ததை தொடர்ந்து இரண்டு நாள் இடைவெளியில் மீண்டும் ஒரு சிறுத்தை இறந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குனோ தேசிய பூங்காவில் மற்றொரு சிறுத்தை மரணம்! 4 மாதங்களில் 7வது சாவு!

கடந்த மார்ச் 27ம் தேதி ஷாஷா என்ற பெண் சிறுத்தை ஒன்று சிறுநீரகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளால் இறந்தது. அதற்கு முன்பாக ஏப்ரல் 23ம் தேதி உதய் என்கின்ற சிறுத்தை இதய சம்பந்தமான பிரச்சினைகளால் இறந்தது. அதேபோல மே மாதம் 9ம் தேதி தக்சா என்ற பெண் சிறுத்தை மற்றொரு ஆண் சிறுத்தையுடன் இணை சேரும்போது நடைபெற்ற சண்டையில் இறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் சிறுத்தைகளை கவனித்துக் கொள்ள இன்னும் அதிக அளவில் பயிற்சி பெற்ற கால்நடை மருத்துவர் நியமிக்க உள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். சிறுத்தைகள் அதிகம் வசிக்கும் இடத்தில் ஒரு பெண் சிறுத்தை, ஆண் சிறுத்தையை அடித்துக்கொள்ளும் நிகழ்வுகளை இதற்கு முன்பு கேள்விப்பட்டதில்லை என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். 

மசால் தோசைக்கு சாம்பார் இல்லையா? வழக்கு போட்ட நபர்.. ஹோட்டலுக்கு 3500 அபராதம் விதித்த நீதிமன்றம்..

Follow Us:
Download App:
  • android
  • ios