கேரளாவில் கொரோனா காரணமாக ஒருவர் உயிரிழப்பு.. மக்களுக்கு சுகாதாரத்துறை விடுத்த எச்சரிக்கை..
கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கோவிட் காரணமாக வடக்கு கேரளாவில் ஒருவர் உயிரிழந்ததால் அம்மாநிலம் முழுவதும் தொற்றுநோய்க்கு எதிராக எச்சரிக்கையை சுகாதாரத் துறையை வெளியிட்டுள்ளது. கண்ணூர் மாவட்டம், பானூர் நகராட்சி 1வது வார்டில் இந்த மரணம் பதிவாகியுள்ளது. இறந்தவர், 80 வயதான அப்துல்லா என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் இருமல் மற்றும் சுவாசத்திற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து இப்பகுதியில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. எம்எல்ஏ கே.பி.மோகனன் தலைமையில் நடந்த அவசர கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதனிடையே, புதிய துணை மாறுபாடு குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று அம்மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ், கேட்டுக்கொண்டார். ,மேலும் பேசிய அவர் "கவலைப்பட ஒன்றுமில்லை. அது ஒரு துணை மாறுபாடு. இது இப்போது கண்டறியப்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பு, சிங்கப்பூர் விமான நிலையத்தில் இந்தியர்களிடம் சோதனை செய்தபோது இது கண்டறியப்பட்டது. இது இந்தியாவின் பிற பகுதிகளிலும் உள்ளது.
கேரளாவில் தற்போது இந்த மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவின் சுகாதார அமைப்பு மிகவும் நன்றாக இருப்பதால், மரபணு வரிசைமுறை மூலம் அதைக் கண்டறிய முடியும். கவலைப்படத் தேவையில்லை. நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். ஆனால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இணை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும், "என்று அவர் கூறினார்.
கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாரப்பூர புள்ளிவிவரங்களின்படி, அம்மாநிலத்தில் நவம்பர் மாதத்தில் 470 பாதிப்பு இருந்த நிலையில், இந்த மாதத்தின் முதல் 10 நாட்களில் 825 புதிய பாதிப்புகளும் பதிவாகியுள்ளன, இது இந்தியாவிலேயே அதிகம். அதாவது நாட்டின் கொரோனா பாதிப்பில் 90% கேரளாவில் பதிவாகிறது.
அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சன்னி பி. ஓரத்தேல் இதுகுறித்து பேசிய போது "சுவாச அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளில் கோவிட் பாதிப்பு கண்டறியப்படுகின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அவர்கள் H1N1 வைரஸ் நெகட்டிவ் என்ற முடிவு வந்தாலும், சில நோயாளிகளுக்கு கொரோனா பாசிட்டிவ் என்ற முடிவு அருகிறது. கொரோனா பாதிப்பு உறுதியான நபர்களுக்கு இந்த முறை அறிகுறிகள் நீண்ட நாட்கள் நீடிக்கின்றன. குறிப்பாக ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் கூட அறிகுறிகள் நீடிக்கும். இருப்பினும், இப்போது நாம் கவனிப்பது என்னவென்றால், கோவிட் நோயை விட, வளிமண்டல மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக அறிகுறிகள் மோசமடைகின்றன" என்று தெரிவித்தார்.
கேரளாவில் கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், பெரும்பாலான நோயாளிகளில் கடுமையான பாதிப்பு இல்லை என்றும் இறப்புகளும் மிகக் குறைவு என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் இணை நோய் உள்ளவர்கள் மற்றும் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்..
மர்ம நிமோனியா முதல் டெங்கு வரை.. 2023-ல் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்த நோய்கள்..
இந்திய SARS-CoV-2 மரபியல் கூட்டமைப்பின் சமீபத்திய தரவு கேரளாவில் JN.1 மாறுபாடு இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது, இந்த மாறுபாடு காரணமாக தற்போது சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கூட கோவிட் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. JN.1 என்பது BA.2.86 ஒமிக்ரான் மாறுபாட்டின் துணைப் பரம்பரையாகும், இந்த மாறுபாடு கடந்த ஆகஸ்ட் மாதம் லக்சம்பேர்க்கில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. BA.2.86, "Pirola" மாறுபாடு என்றும் அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.