இந்தியாவில் கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டு இருக்கும்போது மீண்டும் அதிகளவில் பரவக் கூடிய உருமாறிய BA.5.1.7 வகை கொரோனாவை தொற்று குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது. 

சமீபத்தில் சீனாவில் கண்டறியப்பட்டு இருக்கும் BF.7 மற்றும் BA.5.1.7 வகை கொரோனா தற்போது இந்தியாவிலும் கண்டறியப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி நெருங்கும் நிலையில் மக்கள் கடைகளுக்கு செல்வது அதிகரித்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மக்கள் இந்த வகை கொரோனா தாக்கத்தில் இருந்து அனைவரும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 

மனிதர்களுக்கு இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை மிஞ்சும் வகையில் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் இருக்கும் என்று அறியப்பட்டுள்ளது. தொடர்ந்து தீபாவளி விடுமுறை வருவதால், மக்கள் வெளியே செல்வதும் அதிகரிக்கும் என்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. முன்பு போடப்பட்ட கொரோனா தடுப்பூசிக்கும் இந்த வகை உருமாறிய வைரஸ் கட்டுப்படாது என்று தெரிய வந்துள்ளது.

ஊழியர்களுக்கு இன்பஅதிர்ச்சி அளித்த சென்னை நகைக்கடை உரிமையாளர்! ரூ.1.20 கோடியில் பைக், கார் தீபாவளிப் பரிசு

இதை உறுதி செய்யும் வகையில் நாட்டின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் பரவி வருகிறது. டெல்லியில் 2 சதவீதம் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. மும்பையிலும் கடந்த சனிக்கிழமை புதிதாக 180 பேருக்கும், கர்நாடகா மாநிலத்தில் 163 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த வகை உருமாறிய கொரோனா தொற்று அறிகுறிகளாக தொண்டை வலி, சளி அடைப்பு, தலைச் சுற்றல், இருமல், மூக்கில் ஒழுகுதல் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளது. இனிமேல் கொரோனா தடுப்பூசி கொள்முதல் இல்லை என்று கூறி வந்த நிலையில், மீண்டும் புதிய வகை உருமாறிய தொற்று ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Covid Vaccine:இனி கொரோனா தடுப்பூசி கொள்முதல் இல்லை!ரூ.4 ஆயிரம் கோடியை திரும்ப ஒப்படைக்கிறது சுகாதாரத் துறை