Asianet News TamilAsianet News Tamil

ஒடிசா சோகம்.. ரயில் பெட்டிக்கு அடியில் இன்னும் மனித உடல்கள் உள்ளதா? துர்நாற்றத்திற்கு என்ன காரணம்?

ரயில் நிலையத்தில் அழுகிய முட்டைகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது என்று கண்டறியப்பட்டது.

Odisha Tragedy.. Are there still human bodies under the train coach? What causes foul smell
Author
First Published Jun 10, 2023, 4:59 PM IST

ஒடிசாவின் பாலசோரில் பயங்கரமான ரயில் விபத்து நடந்து ஒரு வாரம் ஆன நிலையில், பஹானாகா பஜார் ரயில் நிலையத்திற்கு அருகில் வசிக்கும் உள்ளூர்வாசிகள் சேதமடைந்த பெட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கவலை தெரிவித்தனர். இதனால் அங்கு சில உடல்கள் இன்னும் அகற்றப்படாலம் இருந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. இதையடுத்து, ரயில்வே அதிகாரிகள், மாநில அரசு உதவியுடன் சோதனை நடத்தினர்.

ரயிலை தவறவிட்டாலோ, டிக்கெட்டை ரத்து செய்தாலோ, முழு பணத்தை திரும்ப பெறலாம்.. எப்படி தெரியுமா?

இந்த சோதனைக்கு பிறகு தென்கிழக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஆதித்ய குமார் பேசிய போது “ ரயில் நிலையத்தில் அழுகிய முட்டைகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது என்று கண்டறியப்பட்டது. யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸில் பார்சல் வேனில் சுமார் 3 டன் முட்டைகள் கொண்டு செல்லப்பட்டன. அனைத்து முட்டைகளும் அழுகியதோடு துர்நாற்றம் வீசியது. விபத்து நடந்த இடத்தில் இருந்து மூன்று டிராக்டர்களில் முட்டைகளை அகற்றியுள்ளோம்,” என்று தெரிவித்தார்.

ஒடிஷா ரயில் சோகம்

ஜூன் 2 அன்று, ஒடிசாவின் பாலசோர் அருகே, கோரமண்டல் எக்ஸ்பிரஸ், நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதி, அதன் பெரும்பாலான பெட்டிகள் தடம் புரண்டது. அதில் ஒரு சில பெட்டிகள் அதே நேரத்தில் அந்த வழியாக சென்று கொண்டிருந்த பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸின் கடைசி சில பெட்டிகள் மீது கவிழ்ந்தது. பாலசோரில் நடந்த பயங்கரமான மூன்று ரயில் விபத்தில் 288 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 1,200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்தியாவில் சமீப காலங்களில் நடந்த மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

இதுவரை 200க்கும் மேற்பட்ட உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், புவனேஸ்வர் எய்ம்ஸ் பிணவறையில் இன்னும் 80 உடல்கள் உரிமை கோரப்படாமல் அடையாளம் தெரியாமல் உள்ளன.

ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், இது ஒரு "கிரிமினல் செயல்" என்றும், இன்டர்லாக் அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். பாலசோர் ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ குழு விசாரணையை தொடங்கியுள்ளது. ரயில்கள் இருப்பதைக் கண்டறியும் எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் முறைகேடு நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, இந்த சோகத்தின் பின்னணியில் "நாசவேலை" இருப்பதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

 

தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக ராமச்சந்திரன் விஸ்வநாதன் அறிவிப்பு.. யார் இவர்? வழக்கின் பின்னணி என்ன?

Follow Us:
Download App:
  • android
  • ios