ஒடிசா மாநிலத்தில் உள்ள கியோஞ்சர் மாவட்டம் காடகன் பகுதியில் இன்று காலை தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கனரக லாரி மீது கண்ணிமைக்கும் நேரத்தில் வேன் மோதி விபத்துக்குள்ளானது.

ஒடிசாவில் கனக லாரியின் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஒடிசா மாநிலத்தில் உள்ள கியோஞ்சர் மாவட்டம் காடகன் பகுதியில் இன்று காலை தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கனரக லாரி மீது கண்ணிமைக்கும் நேரத்தில் வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்புதுறையினருக்கும் ததகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து படுகாயமடைந்த 7 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த 8 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க;- இன்னைக்கு 10 மணிக்குள் சென்னை உள்ளிட்ட இந்த 6 மாவட்டங்களில் தரமான சம்பவம் இருக்காம்.. வானிலை மையம் அலர்ட்..!

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கோவிலுக்கு, இரண்டு குடும்பத்தை சேர்ந்த 20 பேர் வேனில் பயணம் செய்த போது பனிமூட்டம் காரணமாக விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.