Coromandel Train Accident : கோரமண்டல் ரயில் விபத்து - பிரதமர் மோடி இரங்கல் !!
Chennai Coromandel Express Accident : ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மேற்கு வங்கம்- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு இடையே தினசரி அடிப்படையில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டம் அருகே வெள்ளிக்கிழமை இரவு சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. ஒடிசாவின் பாஹா நாகா பஜார் ரயில் நிலையம் அருகே ரயில்கள் மோதிய இந்த விபத்தில் பயணிகள் பலரும் சிக்கியுள்ளனர். 288 பேர் பலியாகியுள்ளனர்.
900 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு கோபால்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக ஒடிஷா மாநில தலைமைச்செயலாளர் தகவல் கூறியுள்ளார். இதனிடையே, ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த ரயில் விபத்து தொடர்பாக தொலைபேசியில் ஆலோசித்துள்ளார். மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தமிழக அரசு செய்யும் என ஒடிஷா முதல்வரிடம் தமிழக முதல்வர் உறுதியளித்துள்ளார்.
தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஒடிஷா செல்லவுள்ளார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த நிலையில் கோரமண்டல் ரயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து வேதனையை அளிக்கிறது.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். ரயில்வே அமைச்சரிடம் பேசினேன். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க..Coromandel Express derails : கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து - 300க்கும் மேற்பட்டோர் காயம்