இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என்னை நிர்வாணமாக வீடியோ சாட் செய்யச் சொன்னார்கள், புகைப்படம் அனுப்பச் சொன்னார்கள். நானும் அப்படி செய்தேன் என அரைநிர்வாணமாக போராடிய நடிகை ஸ்ரீ ரெட்டி அடுத்த அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதை எதிர்த்து குரல் கொடுத்து வரும் ஸ்ரீ ரெட்டி. “ஸ்ரீ லீக்ஸ்” என்ற பெயரில் நடிகைகளை செக்சுக்காக படுக்கைக்கு அழைத்து படுக்கையை பகிர்ந்துகொண்ட  பிரபலங்களின் லீலை புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது; இப்போது திரையுலகில் இருப்பவர்கள் ஹோட்டலிலோ அல்லது சொகுசு விடுதியிலோ நடிகைகளுடன் செக்ஸ் வைத்துக் கொள்வதில்லை மாறாக செக்ஸ் வைத்துக் கொள்ள ஸ்டுடியோக்கள் தான் பாதுகாப்பான இடங்கள். பெரிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ஹீரோக்கள் ஸ்டுடியோக்களை பிராத்தல்கள் போன்று பயன்படுத்துகிறார்கள்.

பிரபல ஸ்டுடியோக்கள் சிவப்பு விளக்கு பகுதி போன்று காணப்படுகின்றன. ஸ்டுடியோக்களுக்குள் யாரும் வர மாட்டார்கள் என்பதால் அது பாதுகாப்பான இடம். அதேபோல போலீசாரும் சோதனை செய்ய மாட்டார்கள், அரசும் இதை கண்டுகொள்ளாது என்பதால் இப்படி நடக்கிறது.

வட நாட்டில் இருந்து வரும் நடிகைகள் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்வதால் தெலுங்கு பேசும் நடிகைகளுக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஏன் என்றால் தெலுங்கு பேசும் பெண்கள் அட்ஜஸ்ட் செய்வது இல்லை.

இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுடன் எனக்கு நிறைய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவர்கள் என்னை நிர்வாணமாக வீடியோ சாட் செய்யச் சொன்னார்கள், புகைப்படம் அனுப்பச் சொன்னார்கள். நானும் செய்தேன், அந்த செக்ஸ் வீடியோ சாட் வேன்னிடம் வீடியோ ஆதாரமாக உள்ளது என அடுத்த அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறார் ஸ்ரீ ரெட்டி.