NEET UG 2022 : நீட் தேர்வு அட்மிட் கார்டு விரைவில் வெளியீடு.. பதிவிறக்கம் செய்வது எப்படி..? முழு விபரம்..
நீட் தேர்வுக்கான நகர அறிவிப்பு சீட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அது போல் நீட் நுழைவுச் சீட்டை வெளியிடுவதற்கு முன், என்டிஏ- யால் தேர்வு நகர அட்வான்ஸ் சீட் வெளியிடப்படும்.என்டிஐ- யால் அனுமதி அட்டை வெளியிடப்பட்டதும், பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் NEET UG 2022 - க்கான நுழைவுச் சீட்டை அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நாடு முழுவதும் வரும் ஜூலை 17 ஆம் தேதி இளங்கலை மருத்துவ படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும் நுழைத்தேர்வு ( நீட்) நடைபெறவுள்ளது. இதனை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. நீட் 2022 தேர்வினை எழுத இந்த ஆண்டு 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.
மேலும் படிக்க:அனைத்து கல்லூரிகளும் ஜூலை 18-ல் திறப்பு.. அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது..? வெளியான முக்கிய தகவல்.
மேலும் படிக்க:பொறியியல் படிப்புக்கு ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்.. கலந்தாய்வு குறித்து முக்கிய தகவல்.. முழு விவரம்
மேலும் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெறும் இத்தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும். இந்தியாவில் சுமார் 543 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களிலும் நடக்கவுள்ளது. இந்நிலையில் தற்போது நீட் தேர்வுக்கான நகர அறிவிப்பு சீட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அது போல் நீட் நுழைவுச் சீட்டை வெளியிடுவதற்கு முன், என்டிஏ- யால் தேர்வு நகர அட்வான்ஸ் சீட் வெளியிடப்படும்.
என்டிஐ- யால் அனுமதி அட்டை வெளியிடப்பட்டதும், பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் NEET UG 2022 - க்கான நுழைவுச் சீட்டை அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க:NEET : இந்த ஆண்டு நீட் தேர்வு நடக்குமா ? நடக்காதா ? என்டிஏ கொடுத்த புது விளக்கம்
தற்போது வெளியான NEET UG 2022 அட்மிட் கார்டைப் பதிவிறக்கம் செய்வது எப்படி..?
1. முதலில் neet.nta.nic.in. எனும் NTA NEET இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்
2.அங்கு முகப்புப் பக்கத்தில் இருக்கும் “NEET-UG 2022 அட்மிட் கார்டு” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
3.பிறகு விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்ப எண், சான்றிதழ்களை உள்ளீடு செய்து, சமர்ப்பி என்பதை கிளிக் செய்யவும்.
4.உங்கள் NEET UG 2022 அனுமதி அட்டை திரையில் காட்டப்படும்.
NEET UG 2022 அட்மிட் கார்டைப் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
5. நீட் நுழைவு அட்டை 2022 யாருக்கும் தபால் மூலம் அனுப்பப்படாது.
6. ஹால் டிக்கெட்டை ஆன்லைனில் மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
UG NEET 2022 தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் எனும் கோரிக்கை வலுக்கும் நிலையில், தேர்வு கால அட்டவணையின்படி, ஜூலை 17, 2022 அன்று ஏற்கனவே திட்டமிட்டபடி தேர்வு நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.