NEET : இந்த ஆண்டு நீட் தேர்வு நடக்குமா ? நடக்காதா ? என்டிஏ கொடுத்த புது விளக்கம்
NDA Official Confirmed that NEET UG 2022 will not be Postponed : தேர்வுக்கு தயாராவதற்கு போதுமான நேரம் இல்லாததால் தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்றும் மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.
தேசிய தேர்வு முகமை (என்டிஏ) பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு-UG (CUET-UG), மருத்துவம் மற்றும் அதுசார்ந்த படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு-யுஜி (NEET-UG) மற்றும் பொறியியல் மற்றும் கட்டிடக்கலை படிப்புகளுக்கான கூட்டு நுழைவுத் தேர்வு-முதன்மை (JEE-main) ஆகிய மூன்று பெரிய நுழைவுத் தேர்வுகளை நடத்துகிறது.
மாணவர்களில் ஒரு பிரிவினர் இந்த தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி கோரிக்கை விடுத்து வருகின்றனர். மூன்று முக்கியமான தேர்வுகளும் குறுகிய காலத்தில் வரிசையாக வருவதால் தேர்வுக்கு சரியாக படிக்க முடியாமல் போக வாய்ப்புள்ளது. அதனால் நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க : இரட்டை இலையை எவனுக்கும் விட்டுத் தர மாட்டோம்..களத்தில் குதித்த மாயத்தேவர் பாசறை.. யார் இந்த மாயத்தேவர்?
இதையும் படிங்க : TASMAC: மாஸ்க் இருந்தா தான், இனி மது கிடைக்கும்.. டாஸ்மாக் அதிரடி உத்தரவு - குடிமகன்கள் ஷாக்!
NEET-UG 2021 -ன் கல்வி ஆண்டின் கவுன்சலிங் மற்றும் துவக்கத்தில் ஏற்பட்ட தாமதம், தேர்வுக்கு தயாராவதற்கு போதுமான நேரம் இல்லாததால் தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்றும் மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், அறிவிக்கப்பட்ட தேதியில் நீட் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது. அதோடு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஜூலை 15ஆம் தேதி க்யூட் தேர்வும், ஜூலை 21ஆம் தேதி ஜேஇஇ மெயின் தேர்வும் நடைபெறும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : MGR : ஒற்றை தலைமை விவகாரம் - அன்றே கணித்த எம்.ஜி.ஆர்.. தீர்வு இதுதான் !!