now a days loan cancel is very fashion said vengaiah naidu

தற்போதைய சூழ்நிலையில் அனைத்து மாநில விவசாயிகளும் கடன் தள்ளுபடி என்று போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் கடன் தள்ளுபடி பேஷனாகி விட்டது எனவும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

சில ஆண்டுகளாக தமிழகதத்தில் பருவ மழை பொய்த்து போனதால் விவசாயம் செய்ய முடியாமல் பயிர்கள் காய்ந்து போயின. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லியில் 40 நாட்களாக பல்வேறு போராட்டகளில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் கடைசிவரை அவர்களுக்கு மத்திய அரசு கடன் தள்ளுபடி செய்யாமல் இதுவரை இழுக்கடித்து வருகிறது. அதேபோல் இந்தியாவின் பல மாநிலங்களிலும் விவசாயிகள் கடன் தள்ளுபடி கேட்டு போராட்டத்தில் குதித்தனர்.

அதன் ஒரு பகுதியாக மகாராஸ்ட்ராவில் பாதுக்காப்பு துறை அமைச்சகம் விவசாய நிலங்களை கைப்பற்றியுள்ளதாக கூறி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கடன் தள்ளுபடி தற்போது பேஷன் ஆகிவிட்டது எனவும், மிகவும் இக்கட்டான சூழலில் மட்டுமே கடன் தள்ளுபடி செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.

மராட்டிய மாநிலத்தில் நடைபெற்று வரும் வன்முறையை தடுக்க கூடுதல் படைகள் அனுப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.