முதல்வர் பதவி மட்டும் இல்ல.. இந்த இலாகாவும் வேண்டும்.. சித்தராமையாவின் மாஸ்டர் பிளான்

முதலமைச்சர் பதவி மட்டுமின்றி, நிதித்துறை இலாகாவை பெற சித்தராமையா தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

Not only the Chief Minister's post.. this department should also be in the cabinet.. Siddaramaiah's master plan

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து டெல்லியில் விவாதம் நடந்து வரும் நிலையில், முதல்வர் பதவி மற்றும் நிதித் துறை இலாகாவையும் பெற சித்தராமையா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களும் தற்போது நடுநிலையான நிலைப்பாட்டை கடைபிடித்துள்ளனர் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் நிலைமைகள் சித்தராமையாவுக்கு சாதகமாக உள்ளன என்று கூறப்படுகிறது. சித்தராமையா கிட்டத்தட்ட அனைத்து எம்எல்ஏக்களுக்காகவும் விரிவாக பிரச்சாரம் செய்ததால், டி கே சிவகுமாருக்கு விசுவாசமானவர்களும் அவருக்கு ஆதரவாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கர்நாடகா சென்று மூத்த தலைவர்களை சந்தித்து பின்னர் முதலமைச்சர் யார் என்ற அறிவிப்பை வெளியிடலாம் என்றும் கூறப்படுகிறது. கார்கே எடுக்கும் முடிவை சோனியா மற்றும் ராகுல்காந்தி இருவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் தெரிகிறது. எந்த குழப்பமும் வேண்டாம் என்றும், மக்களின் ஆணையை அரசாங்கம் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்றும் கார்கேவிடம் ராகுல் காந்தி கூறியதாக தெரிகிறது.

சிவக்குமார் Vs சித்தராமையா

கர்நாடக முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையா – டி.கே.சிவக்குமார் இருவரிடையே கடும் போட்டி நிலவுகிறது. எனவே இருவரில் யாரை சரியாக சமாதானப்படுத்த வேண்டும் என்பதுதான் காங்கிரசுக்கு உள்ள குழப்பம். சித்தராமையா மற்றும் சிவக்குமார் இருவரும் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இருப்பினும் பல காரணங்களால் சித்தராமையா முன்னிலையில் உள்ளார். எம்.எல்.ஏ.க்கள் சித்தராமையாவுக்கு ஆதரவாக உள்ளனர்,

மறுபுறம் சிவகுமாருக்கு ஒருங்கிணைக்கும் திறன் உள்ளது. நீண்ட அதுமட்டுமின்றி, கர்நாடகாவுக்கு மட்டுமல்ல, மற்ற மாநிலங்களுக்கும் காங்கிரஸுக்கு சிக்கல் தீர்க்கும் தலைவராக இருக்கிறார். சித்தராமையாவுக்கு ஏற்கனவே முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதால், இம்முறை சிவக்குமாருக்கு பதவி வழங்க வேண்டும் என்று அவரின் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்தடுத்த ஆலோசனைக்கு பிறகு சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி வழங்கு காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே முதலமைச்சர் யார் என்ற அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : குட்நியூஸ்! இனி வாட்ஸ் அப்-லேயே மெட்ரோ ரயில் டிக்கெட் பெறலாம்.. எப்படி தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios