5 இல்ல.. குனோ தேசிய பூங்காவில் காமினி சிறுத்தைக்கு பிறந்தது 6 குட்டிகள்.. மத்திய அமைச்சர் தகவல்..
மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் ஆப்பிரிக்க சிறுத்தையான காமினி ஆறு குட்டிகளை ஈன்றுள்ளது என்றும், முன்பு கூறியது போல் ஐந்து குட்டிகள் இல்லை என்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.
காடுகளில் இருந்து விலங்குகளை அதிக அளவில் பிடித்தல், வேட்டையாடுதல், விரிவான வாழ்விட மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறுத்தைகள் எண்ணிக்கை குறைந்து வந்தது.. 1952-ம் ஆண்டில் இந்தியாவில் சிறுத்தைகள் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு பிரதமர் மோடி, சீட்டா பிராஜக்ட் என்ற திட்டத்தை அறிமுகம் செய்தார்..
இந்தியாவின் சிறுத்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி கடந்த 2022ம் ஆண்டு 8 சிறுத்தைகளும், கடந்த ஆண்டு 12 சிறுத்தைகளும் நமீபியாவில் இருந்து சிறுத்தைகள் இந்தியா கொண்டு வரப்பட்டது.. அவற்றை மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி விடுவித்தார்.. இந்த சிறுத்தைகள் அவ்வப்போது குட்டிகளை ஈன்று வருகின்றன.
அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலம் ஷியோபூரில் அமைந்துள்ள குனோ தேசிய பூங்காவில் சமீபத்தில், காமினி என்ற பெண் சிறுத்தை 5 குட்டிகளை ஈன்றதாக தகவல் வெளியானது. ஆனால், அது 5 குட்டிகள் அல்ல, 6 குட்டிகளைப் ஈன்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.முதலில் 5 குட்டிகளை முதலில் வனத்துறையினர் பார்த்தனர். ஆனால், இன்று குனோ தேசிய பூங்காவில் கண்காணிப்பின் போது, மற்றொரு குட்டியை ஊழியர்கள் பார்த்துள்ளனர்..
இதையடுத்து பூங்கா ஊழியர்கள் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்தச் செய்தி கேட்டவுடன் குனோ தேசியப் பூங்காவில் ஊழியர்கள். அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். காமினியின் அனைத்து குட்டிகளும் முற்றிலும் ஆரோக்கியமாக இருப்பதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது குனோவில் 14 குட்டிகள் உட்பட சிறுத்தைகளின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
75 நாட்களில் 6,744 பேருக்கு அம்மை நோய் பாதிப்பு.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..
மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்திர சிங் யாதவ் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், அவரின் பதிவில் 'மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை: இது ஐந்து அல்ல, ஆறு குட்டிகள்! காமினிக்கு ஐந்து குட்டிகள் பிறந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, தற்போது ஆறு குட்டிகளைப் பெற்றெடுத்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காமினியின் அபிமான ஆறு குட்டிகளின் காட்சிகளுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மத்திய பிரதேச குனோ பூங்காவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூன்று குட்டிகள் உட்பட 10 சிறுத்தைகள் இறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.