40 மாடி கட்டிடம்.. வெறும் 9 நொடிகளில் தரைமட்டமாகும் பிரபல நொய்டா இரட்டை கோபுர கட்டிடம்..!

இரட்டை கோபுர கட்டிடத்தினை வெடி வைத்து நொடியில் தரைமட்டமாக்கும் பணி, எடிபைஸ் இன்ஜினியரிங் எனும்  தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது.

Noida twin towers demolition to leave behind 35,000 cubic metres of debris

உத்தர பிரதேச மாநிலம், கௌதம புத்தா நகர் மாவட்டத்தில் உள்ள  நொய்டாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 40 மாடிகளை உடைய இரட்டை கோபுர குடியிருப்பு கட்டடங்களை ஆகஸ்ட் மாதம் 28க்குள்  இடித்து தரைமட்டமாக்க உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது. நொய்டாவில் உள்ள சூப்பர்டெக் என்ற நிறுவனம்,  40 மாடிகளை உடைய, எமரால்டு கோர்ட் என்ற  இரட்டை கோபுர அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியது. 

இந்த கட்டிடத்தில் 915 வீடுகள், 21 கடைகள் கட்டப்பட்டன. இந்த கட்டடம் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்ததையடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முதலில் அலகாபாத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இரட்டை கோபுர கட்டிடத்தினை இடிக்க உத்தரவிட்டது.  அலகாபாத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது சூப்பர்டெக் நிறுவனம்.  இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் விதிகளை மீறி கட்டப்பட்ட  இரட்டை கோபுரங்களை இடித்து தரைமட்டமாக்க தீர்ப்பு அளித்தது.

Noida twin towers demolition to leave behind 35,000 cubic metres of debris

மேலும் செய்திகளுக்கு..“மக்களிடம் உண்மையாக இருங்க.. 8 வழிச்சாலை சரியான திட்டம் தான் !” முதல்வருக்கு அறிவுரை கூறிய அண்ணாமலை!

இரட்டை கோபுர கட்டிடத்தினை வெடி வைத்து நொடியில் தரைமட்டமாக்கும் பணி, எடிபைஸ் இன்ஜினியரிங் எனும்  தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது.  இதனால், கடந்த மே மாதம் கட்டடங்கள் இடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் சில தொழில்நுட்ப கோளாறுகள் திட்டமிட்டபடி இடிக்க முடியவில்லை. இதன்  காரணமாக மூன்று மாதம் அவகாசம் கோரப்பட்டது.  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், போபண்ணா அடங்கிய அமர்வு, வரும் 28ல் அதாவது ஆகஸ்ட் மாதம் 28ல்  இரட்டை கோபுரங்களை இடிக்க நீதிபதிகள் கெடு விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

ஒருவேளை எதிர்பாராத வானிலை மற்றும் தொழிநுட்ப கோளாறுகள் ஏற்பட்டால், அதிகபட்சமாக செப்டம்பர் மாதம் 4க்குள் கட்டிடத்தினைஇடித்து தரைமட்டமாக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். நீதிமன்றம் உத்தரவுபடி கட்டிடத்தை இடிக்கும் பணி பல முறை தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் 28ஆம் தேதி கண்டிப்பாக இடிக்க வேண்டும் என கெடு விதிக்கப்பட்டு உள்ளதால் அதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது. வெடி பொருட்களை பயன்படுத்தி நாளை மதியம் 2.30 மணியளவில் இந்த இரட்டை கோபுர கட்டிடம் தகர்க்கப்பட இருக்கிறது.

கட்டித்தின் சில பகுதிகள் ஏற்கனவே கட்டுமான தொழிலாளர்கள் மூலம் இடிக்கப்பட்டது. கட்டிடத்தை முழுமையாக தரைமட்டமாக்க அதன் தூண்களில் டிரில் எந்திரம் மூலம் மொத்தம் 20 ஆயிரம் துளைகள் போடும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. 3,700 கிலோ சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் பொருத்தப்படுகிறது. இந்த வெடி பொருட்கள் அரியானா மாநிலத்தில் இருந்து வரவழைக்கபட்டு உள்ளன. இந்த பணிகளில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..கூட்டணி சேர்ந்த மோடி - ஸ்டாலின்.. திமுகவை இறங்கி அடிக்கும் ஹெச்.ராஜா - இது தெரியாம போச்சே!

Noida twin towers demolition to leave behind 35,000 cubic metres of debris

வெடிபொருட்களை வெடிக்க செய்ததும் 9 வினாடிகளில் கட்டிடம் முழுமையாக இடிந்து விழுந்துவிடும். கட்டிடம் இடிந்ததும் உள்புறமாக விழும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வெளிப்புறத்தில் எந்த பாதிப்பும் இருக்காது என்றும் 30 மீட்டர் தூரத்துக்கு இதன் அதிர்வுகள் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த இரட்டை கோபுர கட்டடத்தின் அருகே வசிக்கும் 7,000-8,000 மேற்பட்ட மக்களை வெளியேற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அங்கிருந்து வெளியேறும் நபர்களுக்கு தற்காலிகமாக அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளான பரஸ்வநாத் ஸ்ரீஸ்தி, பரஸ்வநாத் பிரெஸ்டீஜ், எல்டிகோ யுடோபியா போன்ற இடங்களில் தங்குவதற்கு அப்பகுதியின் குடியிருப்பு நல சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. அங்குள்ள கிளப்ஹவுசில் சுமார் 200 பேரை தங்க வைத்து அவர்களுக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாபெரும் குடியிருப்புகள் இடிப்பு காரணமாக அங்கு பெரும் தூசி மற்றும் புகை ஏற்பட்டு சுகாதார சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அங்குள்ள பெலிக்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios