அரசு மருத்துமவனையில் தள்ளுவண்டி இல்லாததால், கணவரை சாய்வுதள தரையில் தரதரவென மனைவி இழத்து சென்றார்.
ஆந்திர மாநிலம் குன்டூர் அடுத்த அனந்தபூர் மாவட்டத்தை சோந்தவர் சீனிவாசாச்சாரி (45). கூலி தொழிலாளி. இவரது மனைவி ஷீவானி (40).
கடந்த சில நாட்களாக சீனிவாசாச்சாரிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், வீட்டின் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும், அவருக்கு குணமாகவில்லை.
இதையடுத்து ஷீவானி, நேற்று கால குண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு, ஆட்டோ மூலம் அழைத்து சென்றார். அங்கு டாக்டரின் பரிசோதனைக்கு முதல் மாடிக்கு செல்ல வேண்டி இருந்தது. ஆனால் ஷீவானியால், தனது கணவரை தூக்க முடியவில்லை. மருத்துவமனையில் தள்ளு வண்டி கேட்டபோது, அங்கிருந்த ஊழியர்கள் தர மறுத்துவிட்டனர்.
இதனால் மனமுடைந்த ஷீவானி, அங்கும் இங்குமாக அலைந்தார். ஆனால், அவருக்கு உதவி செய்ய யாரும் வரவில்லை. சிறிது நேரத்தில் திடீரென துணிச்சலான அவர், அங்கு உட்கார்ந்து கொண்டிருந்த தனது கணவரின் கையை பிடித்து, சாய்வு தளம் வழியாக, மருத்துவ சிகிச்சைக்காக முதல் தளத்துக்கு தரதரவென இழுத்து சென்றார்.
இதை பார்த்ததும், அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்களும், நோயாளிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், அந்த நேரத்திலும் யாரும் உதவிக்கு வரவில்லை என்பது வேதனையான சம்பவம்…!
