Asianet News TamilAsianet News Tamil

Train Pantry Car | ரயிலில் பேண்ட்ரி காரை மூட உத்தரவு! இனி ரயிலில் காலை உணவும், தின்பண்டங்களும் கிடைக்காதா?

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே ரேஷன் போல், கிளஸ்டர் அடிப்படையிலான பேண்ட்ரி கார் தயாரிப்பதற்கான வரைபடத்தை IRCTC தயாரித்து வருகிறது. அதன்படி, இனி ரயில் பேண்ட்ரி கார் பெட்டிகளில் உணவு தயாரிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

no more food will be prepared in the pantry car on the train, it all goes under the cluster  method dee
Author
First Published Mar 23, 2024, 11:56 AM IST

ரயில் பேண்ட்ரி காரில் உணவு தயாரிப்புக்கு ரயில்வே வாரியம் தடை

பொதுவாக, ரயில்களில் நீண்ட பயணத்தின் போது, ​​மக்கள் பேண்ட்ரி காரில் உணவு ஆர்டர் செய்கிறார்கள். மேலும், ரயிலின் பேண்ட்ரி காரில் தேவையான அனைத்து உணவுப் பொருட்களும் இருக்கும், இந்நிலையில், ரயிலின் பேண்ட்ரி காரில் சமைப்பதற்கு ரயில்வே வாரியம் தடை விதித்துள்ளதால், வரும் ஜூன் மாதம் முதல் ரயிலில் தின்பண்டங்கள் மற்றும் உணவுகள் தயாரிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்திற்கு பிறகு அமலுக்கு வரும் புதிய விதிகள்

ஜூன் மாதம் வரை மட்டுமே ரயிலின் பேண்ட்ரி காரில் உணவு கிடைக்கும் என்றும், அதன் பிறகு பேண்ட்ரி கார் மூடப்படும் என்றும் ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இருப்பினும், ரயிலில் தேநீர் அல்லது தண்ணீரை சூடாக்கும் வசதி இருக்கும் என்றும், தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் மூதியோர் வசதிக்காக தேவைப்பட்டால், பயணிகள் ரயிலில் தண்ணீர் மற்றும் தேநீர் சூடாக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ரயில் நிலையங்களில் உள்ள IRCTC சமையலறைகளும் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு உணவு எப்படி கிடைக்கும்?

ரயிலில் உள்ள பேண்ட்ரி கார் மற்றும் IRCTC சமையலறைகளும் மூடப்பட்ட பிறகு பயணிகளுக்கு எப்படி உணவு கிடைக்கும்? என்பதற்கும் ரயில்வே வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்காக, கிளஸ்டர் அடிப்படையிலான பேண்ட்ரி கார் தயாரிப்பதற்கான வரைபடத்தை IRCTC தயாரித்துள்ளது. அங்கு காலை உணவு மற்றும் உணவு தயாரிக்கப்பட்டு, அது ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு வழங்கப்படும். IRCTC இந்த க்ளஸ்டர்களுக்கு வெளி உணவு தயாரிப்பாளர்கள் டெண்டர் எடுக்கலாம்.

ரயிலில் பயணிப்பவர்கள் கவனத்திற்கு.. இனி டிக்கெட்டை இப்படி எடுக்க தேவையில்லை.. புதிய வசதி அறிமுகம்..

வந்தே பாரத் ரயிலில் ஏற்கனவே உள்ள கிளஸ்டர் வசதி!

இந்த கிளஸ்டர் வசதி ஏற்கனவே, வந்தே பாரத் (Vande bharath)  அதிவேக ரயிலில் உள்ளது. அனைத்து வந்தே பாரத் ரயில்களிலும் தண்ணீரை மட்டுமே சூடாக்க முடியும். ரயில் முழுவேகத்தில் இயங்க தயாரானதும், பயணிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்படும். இந்த முறையை அனைத்து ரயில்களிலும் அமல்படுத்த ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

ரயில்வே டெண்டர் வெளியிடும்

இந்த புதிய முறையின் கீழ், அனைத்து பயணிகளும் நல்ல மற்றும் புதிய உணவைப் பெற முடியும். Pantry Car இயக்க பல்வேறு நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்படும். ஒரு நிறுவனம் அந்த வழித்தடத்தில் செல்லும் 5 -7 ரயில்களில் உணவு பரிமாறும். இதற்காக, நிறுவனங்கள் வழித்தடத்தில் கிளஸ்டர்களை அமைத்து, அங்கு உணவு தயாரிக்க வேண்டும். உணவு முதல் தின்பண்டங்கள் வரை இந்த கிளஸ்டர்கள் வழியாக ரயில் கொண்டு செல்லப்பட்டு பயணிகளுக்கு விநியோகம் செய்யப்படும்.

ரயில்களில் பயணம் செய்யும் பெண்களுக்கு கிடைக்கும் சலுகைகள் என்னென்ன தெரியுமா?

ரயில்வே வாரியம் விசாரிக்கும்

அனைத்து கிளஸ்டர்களிலும் அவ்வப்போது ரயில்வே வாரியம் சோதனை நடத்தும் என்றும், திடீர் ரெய்டுகளும் நடத்தப்படும் என்றும் ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால், உணவின் தூய்மையை சரிபார்க்க மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்படும். இதன் மூலம் பயணிகளுக்கு தரமான உணவு கிடைக்க வழிவகை செய்யப்படும். வடகிழக்கு ரயில்வேயில் ஏற்கனவே 80 ரயில்களுக்கான கிளஸ்டர்களை வரிசைப்படுத்தும் செயல்முறையை IRCTC தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios