செல்போன் காலிங்டோன் ஒருவரை அழைக்கும்போது குறைந்தபட்சம் 30 வினாடிகள் ஒலிகக் வேண்டும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உத்தரவிட்டுள்ளது
குறிப்பிட்ட செல்போன் நிறுவனத்தின் சந்தாதாரர் மற்றொரு நிறுவனத்தின் சந்தாதாரரை அழைக்கும்போது, அழைப்பு மணி(காலிங்டோன்) குறைந்துவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் முதலில் அழைத்தவர் மிஸ்டுகால் மூலம் அழைப்பு விடுத்து, 2-வது நபரை அழைக்கச் சொல்கிறார். இதன் மூலம் முதலில் அழைத்தவருக்கு 2-வது நபர் கால் செய்யும்போது அந்த நிறுவனத்துக்கு கட்டணம் கிடைக்க வழி செய்யப்படுகிறது, இதன் மூலம் 2-வது கால் செய்யும் நபர் வைத்திருக்கும் நிறுவனம் பயன்பெறும். இதன் மூலம் ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் பலனடைந்துவருவதாக என்ற புகார் டிராயிடம் ஜியோ நிறுவனம் புகார் தெரிவித்திருந்தது
மேலும், அந்த நிறுவனங்கள் லேண்ட்லைன் எண்களை செல்போன் எண்களாகப் பதிவு செய்து, பயனடைந்துவருவதாகவும் ஜியோ நிறுவனம் குற்றம்சாட்டியது.இதையடுத்து செல்போன் மற்றும் லேண்ட்லைன் அழைப்புகளுக்கான புதிய உத்தரவுகளை டிராய் நேற்று பிறப்பித்துள்ளது.
அதன்படி, செல்போனில் மற்றொரு நபரை அழைக்கும்போது அந்த அழைப்பு மணி குறைந்தபட்சம் 30 வினாடிகள் ஒலிப்பது கட்டாயம், லேண்ட்லைன் மூலம் மற்றொரு எண்ணை அழைத்தால், ஒருநிமிடம் அழைப்பு மணி ஒலிக்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 2, 2019, 10:07 AM IST