தாஜ் மஹாலை ஷாஜகான் கட்டியதற்கு ஆதாரம் இல்லை: உண்மையைக் கண்டறிய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
உலக அதியசங்களில் ஒன்றான தாஜ் மஹாலை மன்னர் ஷாஜகான் கட்டியதற்கு ஆதாரம் ஏதும் இல்லை, அறிவியல் பூர்வமான உண்மை வரலாற்றை கண்டறிய வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
உலக அதியசங்களில் ஒன்றான தாஜ் மஹாலை மன்னர் ஷாஜகான் கட்டியதற்கு ஆதாரம் ஏதும் இல்லை, அறிவியல் பூர்வமான உண்மை வரலாற்றை கண்டறிய வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
டாக்டர் ரஜ்னீஷ் சிங் என்பவர் இந்த மனுவை மேல்முறையீட்டு மனுவாகத் தாக்கல்செய்துள்ளார். இவரின் மனு ஏற்கெனவே அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
மல்லிகார்ஜூன கார்கே மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகல்:சிதம்பரத்துக்கு பதவி?
ரஜ்னிஷ் தனது மனுவில் கூறுகையில் “ மன்னர் ஷாஜகான் அவரின் மனைவி மும்தாஜ் இறந்தபின் 22 ஆண்டுகளாக இந்த தாஜ் மஹாலை கட்டியுள்ளார். அதாவது 1631 முதல்1653 வரை கட்டியதாக வரலாறு தெரிவித்தாலும், எந்தவிதமான அறிவியல் பூர்வமான ஆதாரங்களும் இல்லை. ஆதலால் தாஜ்மஹாலின் உண்மை வரலாற்றைக் கண்டறிய உண்மை கண்டறியும் குழுவை நியமித்து உண்மையை கண்டறிய உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
காமராஜரும் காங்கிரஸ் கட்சியும்: கிங்மேக்கர் வகுத்த‘கே-பிளான்’: மறந்ததால் சரிந்தது
ரஜ்னீஷ் தனது வழக்கறிஞர் ஸ்ரீவஸ்தவா மூலம் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தாஜ் மஹாலைக் கட்டியது யார் எனக் கேட்டுள்ளார். அதற்கு தாஜ்மஹாலை ஷாஜகான்தான் கட்டினார் என்பதற்கு பிரதானமான ஆதாரங்கள் ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் தொல்லியல் துறைக்கும் தகவல் அறியும் மனு மூலம் கேள்விகேட்டபோதும் கிடைத்த பதிலும் ரஜ்னிஷுக்கு திருப்தி அளிக்கவில்லை.
திருப்பதியில் இன்று இரவு கருட சேவை.. லட்சக்கணக்கான பக்தர்கள் திரள வாய்ப்பு..
முன்னதாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “ தாஜ்மஹாலில் திறக்காமல் இருக்கும் 22 அறைகளையும் திறந்து என்ன இருக்கிறது என்று சோதனையிட வேண்டும்” எனவும் கேட்டிருந்தார்.