பிரதமர் மோடி உள்நாட்டில் சுற்றுப்பயணம் செய்யும்போது, வரவேற்பு அளிக்க பூங்கொத்துக்களை கொடுக்க வேண்டாம், அதற்கு பதிலாக காதியில் தயாரிக்கப்பட்ட கைக்குட்டைகள், புத்தகங்களை பரிசாக கொடுங்கள் என்று மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கொச்சியில் கடந்த மாதம் மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடங்கி வைக்க சென்று இருந்தார். அப்போது, பிரதமர் மோடி பேசுகையில் “  நான் புத்தகம் வாசிப்பதில் மிகுந்த நம்பிக்கை உடையவன். வேலை தொடர்பான விஷயங்களால் மட்டுமே அறிவு வளர்ந்துவிடாது. சமூக பொறுப்புணர்வு,  தேசத்துக்கு சேவை செய்தல், சக மனிதர்களுக்கு உதவுதல் ஆகிய குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

  இது நாட்டில் , சமூகத்தில் நிலவும் கொடிய பழக்கங்களை நீக்கும். அதற்கு புத்தகம் வாசிக்க வேண்டும். ஆதலால், எனக்கு பூங்கொத்து கொடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக புத்தகங்கள் கொடுங்கள்’’ என்று தெரிவித்து இருந்தார்

அதன் அடிப்படையில் இப்போது உள்துறை அமைச்சகம் அறிக்கை  வெளியிட்டுள்ளது.