மத்தியப் பிரதேச மாநிலம், காட்னி மாவட்டத்தில் இளம் பெண் பிரசவத்துக்குஆம்புலன்ஸ் இல்லாததால், மருத்துவமனைக்கு 20 கி.மீ. நடந்தே செல்லும் வழியில் சாலையில் பிரசவித்தார். அந்த குழந்தை பிறந்த சில மணித் துளிகளில் இறந்தது.

மத்தியப் பிரதேசத்தில் பாஜனதா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் இருந்து வருகிறார். பா.ஜனதா ஆளும் மாநிலத்தில் பெண்களுக்கு பிரசவ  வசதிகள் கூட சென்ற சேராத நிலை ஏற்பட்டுள்ளது.

பாட்னி மாவட்டம், பார்மாரி கிராமத்தைச் சேர்ந்தவர் பீனா. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில், திங்கள்கிழமை இவருக்கு பிரசவ நேரம் நெருங்கியதையடுத்து, மருத்துவமனைக்குச் செல்ல நேரிட்டது. ஆம்புலென்ஸ்அழைக்கச் சென்ற கணவர் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. அந்த பெண்ணின் உறவினர்களும் சமுதாய மருத்துவக்கூடத்தில் ஆம்புலென்சுக்கு தகவல் அளித்தும் வரவில்லை.

இதையடுத்து, பார்கி நகரில் உள்ள சமுதாய மருத்துவக் கூடத்துக்கு நடந்தே செல்ல பீனா தீர்மானித்தார். போக்குவரத்து வசதியும் இல்லாத கிராமமாக இருந்ததால், 20 கி.மீ கி.மீ அந்த பெண் நடந்தே சென்றார். இந்நிலையில், பார்கி நகரை அடைந்த போது, அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட, சாலையிலேயே பீனாவுக்கு பிரசவம் நிகழ்ந்தது.

இந்த பிரசவம் நடந்த இடத்துக்கு அருகே போலீஸ் நிலையம் இருந்தது. இதனால், அந்த பெண் மிகுந்த தர்மசங்கடத்துக்கு ஆளானார், ஆனால், பிறந்த சில நிமிடங்களில் அந்த சிசு இறந்தது.

இது குறித்து மாவட்ட தலைமை மருத்தவ அதிகாரி அசோக் அவைத்தியா விடம் கேட்டபோது, “ அந்த குழந்தை குறைமாதத்தில் பிறந்ததால் இறந்துவிட்டது,ஆம்புலன்சுக்கும் மருத்துவமனைக்கும் தொடர்பில்லை, அது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை’’ என்றார்.