Asianet News TamilAsianet News Tamil

இதுக்கெல்லாம் இனி ஆதார் அவசியமில்லை… ஆதார் அட்டை கேட்டா அபராதம், சிறை !! மத்திய அரசு அதிரடி !!

செல்போன் சேவை மற்றும் வங்ககிக் கணக்குகள் தொடங்க ஆதார் அட்டையை மட்டுமே  ஆதாரமாக கேட்டால்  1 கோடி ரூபாய் அபராதம்  விதிப்பதோடு மட்டுமல்லாமல் சிறை தண்டனையும் வித்க்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.,

 

No aadar for bank account and cell phone
Author
Delhi, First Published Dec 19, 2018, 7:04 PM IST

ஆதார் எண்கள்  அனைத்து முக்கிய சேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால் அதில் பதிவாகி உள்ள ரகசிய தகவல்கள் திருடப்பட்டு வெளியில் கசிவதாக பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ஆதார் அட்டையை கட்டாயமில்லை என்று அறிவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில்  பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம்  வங்கி சேவைகள், தொலை தொடர்பு சேவைகளுக்கு ஆதார் கட்டாயம் இல்லை என்று அறிவித்தது.
No aadar for bank account and cell phone
மேலும் ஆதார் அட்டைகளை அரசின் பொதுநல திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதன் காரணமாக ஆதார் கட்டாயமில்லை என்ற நிலை உருவாகி உள்ளது.

என்றாலும் செல்போன் சேவை மற்றும் வங்கி கணக்குகளுக்கு தொடர்ந்து ஆதார் எண்கள் விபரம் கேட்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து செல்போன் சேவை, வங்கி கணக்குகள் தொடங்க ரேசன் கார்டு அல்லது பாஸ்போர்ட் இருந்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் அதையும் மீறி ஆதார் எண்கள் கேட்கப்படுகின்றன. இதையடுத்து இதை ஒழுங்குப்படுத்துவதற்காக மத்திய அமைச்சரவை  கூட்டத்தில் அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி செல்போன் சேவை மற்றும் வங்கி கணக்குகள் தொடங்க ஆதார் அட்டையை மட்டுமே ஆதாரமாக கேட்டால் ரூ.1 கோடி அபராதம் விதிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

No aadar for bank account and cell phone

மேலும் விதிகளை மீறும் தொலைத்தொடர்பு நிறுவன ஊழியர்கள், வங்கி ஊழியர்களுக்கு 3 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த முடிவுகள் அனைத்தும் விரைவில் சட்டதிருத்தமாக கொண்டுவரப்பட உள்ளன.

மேலும் ஆதார் தகவல்களை தவறாக பயன்படுத்துபவர்களுக்கும் 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யவும் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது

Follow Us:
Download App:
  • android
  • ios