பிஹார் முதலமைச்சர்  நிதிஷ் குமார் மற்றும்  அவரின் அமைச்சர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் என்பதை அம்மாநில அரசு கட்டாயமாக்கியது

அதன்படி புத்தாண்டின் முதல் வேலை நாளான இன்று பீகார் முதலமைச்சர்  நிதிஷ் குமார் மற்றும் அமைச்சர்கள் தங்கள் சொத்து விபரங்களை  வெளியிட்டுள்ளனர்.

நிதிஷ் குமார் ரொக்கப் பணம், வங்கியிருப்புத் தொகை, ஃபோர்ட் கார், பசுக்கள், கன்றுகள், இரு சக்கர வாகனம் மற்றும் டெல்லியில் உள்ள ஒரு பிளாட் ஆகியவற்றை சேர்த்து 86 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வைத்துள்ளதாகக் கணக்கு காண்பித்துள்ளார்

அதே நேரத்தில்  நிதிஷ் குமாரின் மகனின் சொத்து மதிப்பு 2 கோடியே 36 லட்சம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிஹார் மாநிலத்தின் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவிடம் வாகனங்கள் எதுவும் இல்லை. ஆனால் வீட்டு மனைகள் உள்ளன.

ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரான லாலு பிரசாத் யாதவ் இளைய மகனின் பெயரில் தனப்பூர், கார்டனிபாக் மற்றும் பாட்னாவுக்கு அருகில் உள்ள பகுதியில் அவருக்கு பெரியளவில் நில மனைகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாலு பிரசாத்தின் மூத்த மகனும், பிஹாரின் சுகாதாரத்துறை அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவிடம் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள  பைக், 28 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் உள்ளன. சொகுசு கார்கள், நில மனைகள் மற்றும் ஆயுதங்கள்

நீர்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் ஒரு பிஸ்டல் மற்றும் ஒரு ரைஃபிள் வைத்துள்ளார். 7 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கார் மற்றும்.1 கோடி ரூபாய் வங்கிக் கையிருப்பும் அவரிடத்தில் உள்ளது.

இதேபோல நிதிஷ் குமாரின்  அமைச்சரவையில் உள்ள அனைவரும் தங்கள் சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளனர்.