இயற்பியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் E=mc2 சூத்திரம் தவறு என்று பிரபல சாமியார் ஐன்ஸ்டைன் கூறியுள்ள வீடியோ 
வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கிமான அறிவயலாளராக கருதப்படுபவர் இயற்பியல் அறிஞர் ஆல்பட் ஐன்ஸ்டைன். தற்காலத்தில், 
ஐன்ஸ்டைன் என்ற சொல், அதி புத்திக்கூர்மையுள்ள ஒருவரை குறிக்கும் சொல்லாக மாறியுள்ளது. ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் E=mc2, 
உலகின் மிக முக்கியமான, சிறந்த சமன்பாடாக இது கருதப்படுகிறது.

இந்த நிலையில், சாமியார் நித்யானந்தா, ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் சூத்திரம் தவறு என்று கூறியுள்ளார். இது குறித்து நித்யானந்தா 
வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், சாமியார் நித்யானந்தா, ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் சூத்திரம் ஒன்றை பற்றி வித்தியாசமான விளக்கம் ஒன்றை 
அளித்துள்ளார். ஆற்றலும், நிறையும் எப்போதும் ஒன்றாக முடியாது என்றும் ஒன்றை மற்றொன்று சார்ந்து இருக்காது என்றும் 
நித்யானந்தா விளக்கியுள்ளார். 

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் பரவும் நித்யானந்தாவின் இந்த வீடியோ பதிவு குறித்து, நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை 
பதிவிட்டு வருகின்றனர்.