ஏன் ஹிந்தி சரியா பேச மாட்றேன்? நிர்மலா சீதாராமன் சொன்ன காரணம்!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனக்கு ஹிந்தி சரியாக பேச வராததன் காரணம் குறித்து தெரிவித்துள்ளார்

யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மத்தியில் அண்மையில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆங்கிலத்தில் பேசுவது அவர்களுக்கு வசதியாக இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். மேலும், தனக்கு ஹிந்தி சரியாக பேச வராது என குறிப்பிட்ட அவர், “நான் பள்ளி, கல்லூரியில் படிக்கும் போது, எனது மாநிலம் ஹிந்தி எதிர்ப்பு இயக்கங்களால் நிறைந்திருந்தது.” என்றார்.
கல்வியில் அரசியல் ஒரு பங்கு வகிக்கிறது. என்னைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் இந்தி கற்பது சாத்தியமற்றது என்றும் அப்போது பேசிய நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மத்திய பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையை செயல்படுத்தி வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அண்மைக்காலமாக, தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்திய அமைச்சர்கள் இந்தியில்தான் கடிதங்கள் எழுதி வருகின்றார்கள். தங்களுடைய முகநூல், ட்விட்டர் போன்ற வலைதளப் பக்கங்களிலும், இந்தியில் மட்டுமே எழுதி வருகின்றார்கள். மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பும் ஆர்வலர்களுக்கு இந்தியில் பதில்கள் அனுப்பப்படுகின்றன.
முதலீட்டில் நம்பர் 1 சந்தை: சீனாவை முந்திய இந்தியா - இன்வெஸ்கோ ஆய்வு தகவல்!
இந்தப் போக்கு தமிழுக்கு மட்டும் அல்ல, அனைத்து இந்திய மொழிகளுக்கும் எதிரானது என்பதால் ஹிந்தி பேசாத மாநிலங்களில் கடும் எதிர்ப்புகள் உருவாகியுள்ளன. தமிழக அரசை பொறுத்தவரை, ஹிந்தி மொழியை யாரும் கற்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை; மும்மொழி கொள்கைக்கும், ஹிந்தி திணிப்புக்கும் தான் எதிர்ப்பு தெரிவிப்பத்காக பலமுறை ஏன் நீதிமன்றங்களிலேயே தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. மேலும், ஹிந்தி திணிப்பு எதிராக தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மாணம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
சென்னை மாகாணப் பள்ளிக்கூடங்களில் இந்தி மொழி கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என 1937ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி ஆணையிட்டது. இதற்கு எதிராக தமிழ்நாட்டில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு உயிர் நீத்தனர். இதனை மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளாக தமிழ்நாடு அரசு அனுசரித்து வருகிறது.
இந்தி மொழியை இந்தியாவின் ஒரே அலுவல் மொழியாக்கவும் மற்றும் இந்தி மொழி பேசாத மாநிலங்களின் கல்விப் பாடத்திட்டங்களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் இந்திய அரசின் முயற்சிக்கு எதிராகத் தமிழக மக்களால், ஜனநாயக, அற வழியில் தமிழக மக்களால் நடத்தப்பட்ட மாபெரும் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.