இந்திய பாதுகாப்பு படையின் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்  அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

காஷ்மீரின் புல்வாமாவில் துணை ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட்டது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய தீவிரவாதிகள் முகாம் மீது 1,000 கிலோ அளவிலான குண்டுகளை மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் வீசி இந்திய விமானப்படை நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பாகிஸ்தான் எல்லைக்குள் 50கிமீ வரை புகுந்து இந்திய விமானப்படை அங்கு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் சுமார் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், உரிய ஆதாரமில்லாமல் தீவிரவாதிகளை தாக்குவதாக பாகிஸ்தான் மீது இந்திய தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், நாங்களும் பதில் தாக்குதல் நடத்தி எங்கள் உரிமைகளை தக்க வைத்துக்கொள்ள பதில் தாக்குதல் நடத்துவோம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.இதனால்,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாகிஸ்தான் எல்லை பகுதியை நெருங்கி உள்ள ஸ்ரீநகர், ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில் விமானங்கள் பறக்க காலவரையின்றி தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பகுதிகளில் ராணுவ விமானங்குக்கு மட்டுமே அனுமதி என்றும் பயணிகள் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அதீத போர் பதற்றம் நீடித்து வருகிறது. இந்திய எல்லையில் நேற்று மாலையில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்திய பாதுகாப்பு படையின் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா, ராணுவ படை தளபதி பிபின்ராவத், கடற்படை தளபதி லம்பா ஆகியோரை நிர்மலா சீதாராமன் சந்தித்துள்ளார். இந்த அவசர ஆலோசனையில், பாகிஸ்தான் தாக்குதல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார்கள். இதில் முப்படை தளபதிகள் வைத்த முக்கிய சில கோரிக்கை ஒன்றை குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் பாகிஸ்தான் மீதான பதிலடி குறித்து இதில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்றும் கூறுகிறார்கள். 

நேற்று முன்தினம் அதிகாலை நடைபெற்ற தாக்குதல் பிரதமர் மோடியின் கண்காணிப்பில் நடந்ததாகவும், மேலும் இந்த திட்டத்திற்கான ப்ளூ பிரிண்ட் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் 3 முக்கிய அதிகாரிகளால் திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.