Asianet News TamilAsianet News Tamil

விலகி விலகி செல்லும் தூக்கு கயிறு.. எமனை ஏமாற்றும் நிர்பயா குற்றவாளிகள்..!

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி ஒடும் பேருந்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்ஷய் குமார் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் மறுசீராய் மனு மற்றும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பி இரண்டு முறை நாள் குறிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டது. 
 
Nirbhaya case... Withdrawal of sentence
Author
Delhi, First Published Mar 2, 2020, 6:27 PM IST

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதை டெல்லி நீதிமன்றம் அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது.  

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி ஒடும் பேருந்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்ஷய் குமார் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் மறுசீராய் மனு மற்றும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பி இரண்டு முறை நாள் குறிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டது. 

Nirbhaya case... Withdrawal of sentence

ஆனால், தண்டனைக்கான நாள் நெருங்கி வரும்போதெல்லாம் குற்றவாளிகள் சார்பில் பல்வேறு புதிய மனுக்களை மாறி மாறி மாறி தாக்கல் செய்து வழக்கை இழுத்தடித்தனர். இந்நிலையில், 3-வது முறையாக மார்ச் 3-ம் தேதி, காலை 6 மணிக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என நீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில், தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என குற்றவாளிகளுள் ஒருவனான பவன் குப்தா மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார். இதை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது.

Nirbhaya case... Withdrawal of sentence

இந்நிலையில், நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், கருணை மனுவை குற்றவாளிக்கு தெரிவிக்கும் விதிப்படி தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இத்துடன் 3-வது முறையாக தூக்கு தண்டனை நிறைவேற்றம் நிறுத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios