நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 20-ம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3 முறை தூக்குத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் 4-வது முறையாக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி ஒடும் பேருந்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்ஷய் குமார் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் மறுசீராய் மனு மற்றும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பி 2 முறை நாள் குறிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டது. 

இதையும் படிங்க;-  சாவுறதுல இருந்து தப்பிக்க பைத்தியம் மாதிரி நடிக்கிறான்! பிடிச்சு தூக்குல போடுங்க சார் அவனை: பொளேர் உத்தரவு..!!

ஆனால், தண்டனைக்கான நாள் நெருங்கி வரும்போதெல்லாம் குற்றவாளிகள் சார்பில் பல்வேறு புதிய மனுக்களை மாறி மாறி தாக்கல் செய்து வழக்கை இழுத்தடித்தனர். இதனையடுத்து, 3-வது முறையாக தண்டனையை நீதிமன்றம் ஒத்திவைத்தது. மறு உத்தரவு வரும் வரை தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது. இதனால், இந்தியாவில் நீதி தாமதம் ஆவதை உலகம் வேடிக்கை பார்க்கிறது என நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கதறியபடி கூறினார்.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 20-ம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3 முறை தூக்குத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் 4-வது முறையாக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.