Asianet News TamilAsianet News Tamil

வெள்ளிக்கிழமை தூக்கு... சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை வைத்து தப்பிக்க துடிக்கும் நிர்பயா குற்றவாளிகள்..!

தங்களுக்கு வழங்கப்பட உள்ள தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி நிர்பயா குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டு உள்ளனர். குற்றவாளிகளில் முகேஷ் குமாரை தவிர எஞ்சிய 3 பேரும் சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். இதனால், 4-வது முறையாக தூக்கு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Nirbhaya case... 3 convicts approach International Court of Justice
Author
Delhi, First Published Mar 16, 2020, 5:39 PM IST

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க கோரிக்கை வைத்துள்ளனர். 

நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகே‌‌ஷ்குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்‌‌ஷய்குமார் சிங் ஆகிய 4 குற்றவாளிகளையும் வரும் வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு தூக்கிலிடும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையில், குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ்குமார் சிங் தனது முன்னாள் வழக்கறிஞர் அனைத்து சட்டவாய்ப்புகளையும் பயன்படுத்தவில்லை எனவும் ஆகையால் தனக்கு அனைத்து சட்டவாய்ப்புகளையும் பயன்படுத்த வாய்ப்பு தரும்படியும் உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தார். 

Nirbhaya case... 3 convicts approach International Court of Justice

இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் குற்றவாளிகளுக்கு அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட்டுவிட்டது எனவும் இனி சட்டவாய்ப்புகள் எதுவும் இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். இதனையடுத்து, 3 முறை தப்பித்த நிர்பயா குற்றவாளிகளுக்கு வரும் வெள்ளிக்கிழமை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியாகிவிட்டது. 

Nirbhaya case... 3 convicts approach International Court of Justice

இந்நிலையில், தங்களுக்கு வழங்கப்பட உள்ள தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி நிர்பயா குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டு உள்ளனர். குற்றவாளிகளில் முகேஷ் குமாரை தவிர எஞ்சிய 3 பேரும் சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். இதனால், 4-வது முறையாக தூக்கு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios