Asianet News TamilAsianet News Tamil

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு குற்றவாளி பற்றி தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம்: என்.ஐ.ஏ. அறிவிப்பு

பெங்களூரு உணவக வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளியைக் கைது செய்வதற்கு முக்கிய தகவல்களை அளித்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

NIA offers Rs 10 lakh cash reward for information on Bengaluru Rameshwaram Cafe blast bomber sgb
Author
First Published Mar 6, 2024, 4:07 PM IST

பெங்களூரு குண்டலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே உணவகத்தில் சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அறிவித்துள்ளது.

இதுகுறித்து புதன்கிழமை என்.ஐ.ஏ., வெளியிட்ட அறிவிப்பில், வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படத்தை வெளியிட்டது. மேலும், இந்த நபரைக் கைது செய்வதற்கு முக்கிய தகவல்களை அளித்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

பொதுமக்களிடமிருந்து ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் முயற்சியாக என்.ஐ.ஏ இந்த சன்மானத்தை அறிவித்துள்ளது. சந்தேகிக்கப்படும் நபர் தொடர்பான முக்கியமான தகவல்களை வழங்கும் எந்தவொரு நபரின் அடையாளமும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்றும் என்.ஐ.ஏ உறுதியளித்தது.

ஒரு மணிநேரத்துக்கு ரூ.1000! தெறிக்கவிடும் பெங்களூரு ப்ரீமியம் பார்க்கிங் கட்டணம்!

இதனால் தகவல் அறிந்தவர்கள் நம்பிக்கையுடன் முன்வந்து தகவல்களை வழங்கலாம் என்றும் அது இந்த வழக்கில் விரிவாக தீர்வு காண்பதை எளிதாக்குயும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய தகவல் தெரிந்தவர்கள் தாமாக முன்வந்து விசாரணைக்கு உதவுமாறு என்ஐஏ வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகளை 08029510900 அல்லது 8904241100 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் எனவும் அறிவித்திருக்கிறது.

ஜெயலலிதா நகைகளை தமிழ்நாட்டிற்கு அனுப்பும் உத்தரவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தடை!

Follow Us:
Download App:
  • android
  • ios