இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதி; வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு - யார் இந்த சஞ்சீவ் கண்ணா?
Chief Justice of India : நீதிபதி சஞ்சீவ் கண்ணா, இந்திய நாட்டின் 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
தற்போதைய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட், மத்திய சட்ட அமைச்சகத்திற்கு கடிதம் எழுதிய சில நாட்களுக்குப் பிறகு, இன்று அதிரடி திருப்பமாக நீதிபதி சஞ்சீவ் கண்ணாவை இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். இந்த நிகழ்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் இந்த நியமனம் வரும் நவம்பர் 11ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், இன்று வெளியிட்ட ட்விட்டர் பக்க பதிவில் “இந்திய அரசியலமைப்பு வழங்கிய அதிகாரத்தைப் பயன்படுத்தி, மாண்புமிகு குடியரசுத் தலைவர், மாண்புமிகு தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகு, இந்த நியமனம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஸ்ரீ நீதிபதி சஞ்சீவ் கண்ணா, இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி, இந்திய தலைமை நீதிபதியாக நவம்பர் 11, 2024 முதல் தனது பொறுப்புகளை ஏற்பர்" என்று அவர் கூறினார்.
நாட்டில் அதிக கோவில்கள் கொண்ட மாநிலம்: 79000 கோவில்களுடன் கெத்தாக நிற்கும் திராவிட மண்
உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான நீதிபதி கண்ணா, இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக இருப்பார். மேலும் எதிர்வரும் மே 13, 2025 அன்று ஓய்வு பெறுவதற்கு முன், இந்த 6 மாதங்கள் அவர் பதவியில் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த சஞ்சீவ் கண்ணா?
நீதிபதி கன்னா கடந்த 1983ல் டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். அவர் ஆரம்பத்தில் தீஸ் ஹசாரி வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் பயிற்சி பெற்றார், பின்னர் டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயங்களுக்குச் சென்றார். கடந்த 2005ல் டெல்லி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக உயர்த்தப்பட்டு, 2006ல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, நீதிபதி கன்னா டெல்லியின் தலைவர்/நீதிபதியாக பதவி வகித்தார். நீதித்துறை அகாடமி, டெல்லி சர்வதேச நடுவர் மையம் மற்றும் மாவட்ட நீதிமன்ற மத்தியஸ்த மையங்கள் உள்ளிட்டவற்றில் அவர் பணியாற்றியுள்ளார்.
அவர் ஜனவரி 18, 2019 அன்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக உயர்த்தப்பட்டார். எந்தவொரு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் ஆவதற்கு முன்பே, உச்ச நீதிமன்றத்திற்கு உயர்த்தப்பட்ட வெகு சிலரில் நீதிபதி கண்ணாவும் ஒருவர்.
வயநாட்டில் 44 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா காந்தியின் பேச்சு; இன்று பேத்தி பிரியங்கா போட்டி!!