வயநாட்டில் 44 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா காந்தியின் பேச்சு; இன்று பேத்தி பிரியங்கா போட்டி!!

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி 44 ஆண்டுகளுக்கு முன்பு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்காக வயநாட்டுக்கு வந்து இருந்தார்கள். அப்ப வயநாட்டுல மானந்தவாடி ஹைஸ்கூல் மைதானத்துல பேசினாங்க. இந்திரா காந்தியோட பேச்சு நினைவுகள் நிறைஞ்ச வயநாட்டுலதான் அவரது பேத்தி பிரியங்கா முதல் முதலாக தேர்தல் களத்தில் இறங்குறாங்க. 

Wayanad remembers Indira Gandhi speech as Priyanka Gandhi contests

இந்திரா காந்தியோட பேச்சு நினைவுகள் நிறைஞ்ச வயநாட்டுலதான் பிரியங்கா காந்தி வத்ரா முதன் முறையாக தேர்தல் களம் காண்கிறார். 44 ஆண்டுகளுக்கு முன்பு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்காக இந்திரா காந்தி வந்திருக்கிறார்கள். மானந்தவாடி ஸ்கூல் மைதானத்துல இன்னமும் இந்திரா பேசின மேடை இருக்கு. 1980 ஜனவரி 18-ம் தேதி காங்கிரஸ் பிரிஞ்சதுக்கு அப்புறம் நடந்த சட்டமன்றத் தேர்தல். காங்கிரஸுக்கு முக்கியமான தேர்தலாக இருந்தது. ஜெயிக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் பிரச்சாரத்துக்கு பிரதமர் இந்திரா காந்தியே வந்தாங்க. அப்படித்தான் பிரச்சாரத்துக்காக இந்திரா காந்தி மானந்தவாடிக்கு வந்தாங்க.

கபினி நதிக்கரைல மானந்தவாடி அரசு ஹைஸ்கூல் மைதானத்துல கட்டின மேடையிலதான் இந்தியாவோட இரும்புப் பெண்மணி அன்னைக்குப் பேசினாங்க.  இந்திரா காந்தியோட பேச்சைக் கேட்கறதுக்கு மானந்தவாடி அரசு ஹைஸ்கூல் மைதானத்துக்கு ஜனங்க கூட்டமா வந்தாங்க. உறுதியான மொழியில, இன்னும் உறுதியான குரல்ல இந்திரா பேசும்போது கைதட்டி வரவேற்றாங்க. ஜனக்கூட்டம் அலைமோதியது. அரசியல விட்டுட்டு, இந்திரா காந்தியைப் பாக்கறதுக்காகவே வந்தவங்க அதிகம்னு மானந்தவாடிவாசி பி. சூப்பி சொல்றாரு. கவர்ச்சிகரமான தலைவர் இந்திரானு சூப்பி சொல்றாரு. மைதானத்துல இந்திரா காந்தி பேசின மேடையோட பகுதிகள் இன்னமும் இருக்கு.

அப்புறம் இந்திராவோட செல்வாக்கு குறைஞ்சாலும், பிரிவினையோட பாதிப்பு வயநாட்டுல காங்கிரஸுக்கு இல்லை. மூணு தொகுதிகள்லயும் காங்கிரஸ் கூட்டணி ஜெயிச்சது. 44 வருஷம் கழிச்சு வயநாட்டுல இந்திரா காந்தியோட பேத்தி பிரியங்கா வேட்பாளரா வரும்போது, அண்ணன் ராகுல் காந்தி வெற்றி பெற்ற தொகுதி. அன்னைக்கு இந்திரா சவால்கள் நிறைஞ்ச சூழ்நிலையில வந்தாங்க. பிரியங்காவுக்கு இது ஆரம்பம்தான். இன்னைக்கு வயநாட்டுல பிரியங்கா காந்தியோட ரோடு ஷோவுக்கு அம்மா சோனியா காந்தி, அண்ணன் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர்கள் வந்திருக்காங்க. ரோடு ஷோவோட வயநாட்டுல தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமாகுது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios