Sonia Gandhi Retirement: சத்தீஸ்கர் மாநிலம் நவராய்ப்பூரில் நடந்துவரும் காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு அளிக்கப்பட்ட மரியாதையும், அவரின் பேச்சும் அரசியலில் இருந்து விலகுகிறாரா என்ற சந்தேகத்தை அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
Sonia Gandhi Retirement: சத்தீஸ்கர் மாநிலம் நவராய்ப்பூரில் நடந்துவரும் காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு அளிக்கப்பட்ட மரியாதையும், அவரின் பேச்சும் அரசியலில் இருந்து விலகுகிறாரா என்ற சந்தேகத்தை அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
நவராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் கட்சியின் காரியக் கமிட்டி உறுப்பினர்கள் குறித்த முடிவும் எடுக்கப்பட உள்ளது. 2024ம்ஆண்டு நடக்கும் மக்களதைத் தேர்தலுக்கு முன்னோட்டமாகவும், எப்படி தயாராவது என்பதை ஆலோசிக்கும் களமாகவும் இந்த மாநாடு இருக்கிறது.
512 கிலோ வெங்காயம் விற்றதற்கு ரூ.2.49 காசு லாபம்: நொந்து கொண்ட மகாராஷ்டிரா விவசாயி
இந்த மாநாட்டின் முதல்நாளான நேற்று காங்கிரஸ்முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. ஆனால், 2வது நாளான இன்று சோனியா காந்திக்கு பேசுவதற்கு வந்தபோது, அவருக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் அளித்த வரவேற்பும் அவர் பேசியதுதான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா என்ற கேள்வியை எழுப்புகிறது

சோனியா காந்தி பேசுவதற்கு வந்தபோது, அனைத்து நிர்வாகிகளும் எழுந்து கைதட்டி வாழ்த்துத் தெரிவித்தனர். 20 ஆண்டுகளாக கட்சியின் தலைவராகவும், 2004ம் ஆண்டு பிரதமர் பதவி வந்தபோது அதை வேண்டாம் என தியாகம் செய்த சோனியா காந்தி குறித்து குறும்படமும் திரையிடப்பட்டது.
வயது முதுமை, உடல்நலக்கோளாறுகள் ஆகியவற்றால், 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சோனியா காந்தி போட்டியிடாமல் தவிர்ப்பாரா, அடுத்து ஒரு தியாகத்துக்கு தாயாராகிவிட்டாரா, சோனிய காந்தியின் தீவிர அரசியல் செயல்பாடு முடிந்துவிட்டதா என்று அவர் பேசிய பேச்சு பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
24காரட் தங்க தோசை| வாங்குற விலைதான! அலைமோதும் கூட்டம் எங்கு தெரியுமா?
சோனியா காந்தி பேசுகையில் “ ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை முடிவுடன் என்னுடைய அரசியல் பயணமும் மகிழ்ச்சியுடன் முடிகிறது. இந்தப் பயணம் காங்கிரஸ் கட்சிக்கு திருப்புமுனையாக அமையும்” என்று தெரிவித்தார். இந்த பேச்சுதான் அரசியல் விமர்சர்கள், அரசியல்நோக்கர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது

சோனியா காந்தியின் இந்த பேச்சை இரு விதங்களில் எடுக்கலாம். ஒன்று தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார் என்பதைக்காட்டுகிறது, மற்றொருவிதம், 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் ஊகிக்கலாம்.
அப்படியென்றால் சோனியா காந்தி நீண்டகாலமாக போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் அடுத்தாக காங்கிரஸ் கட்சியில் யாருக்கு வாய்ப்பு என்ற கேள்வி வரும். அது வேறுயாறுமல்ல, பிரியங்கா காந்திதான். ரே பரேலி மக்கள், பிரியங்கா காந்தியை இந்திரா காந்தியின் மறுஉருவமாகவே பார்த்து வருகிறார்கள் என்பதால், அவருக்கு அந்தவாய்ப்பு செல்லலாம். அல்லது ராகுல் காந்தி போட்டியிடலாம்.
பாசப் போரட்டம்! காரில் அடிபட்டு இறந்த லங்கூர் தாய் குரங்கை எழுப்பிய குட்டிக் குரங்கு
சோனியா காந்தியிடம் நிருபர்கள், மல்லிகார்ஜூன கார்கே தலைமை குறித்துக் கேட்டபோது, சிரித்துக்கொண்டே, “ இதற்காகத்தான் நான் நீண்டகாலமாகக் காத்திருந்தேன்” எனத் தெரிவித்தார்
பிரியங்கா காந்தி அடிக்கடி கூறுவது, தனது தாய் தீவிரவாத அரசியலில் இருந்த ஓய்வு பெற்று ஓய்வெடுக்கவேண்டும் என்பதுதான். இதற்காகவே ஷிம்லாவில் ஒரு காட்டேஜை பிரியங்கா காந்தி கட்டியுள்ளார். ஆனால், கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் தோல்வியால் ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்தபின், தலைவர் பதவியை ஏற்க சோனியா காந்தி நிர்பந்திக்கப்பட்டார்.
ஆனால், இப்போது தலைவர் பதவி நல்லபடியாக மூத்த தலைவருக்கு கைமாற்றப்பட்டது. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோயாத்திரையும் சோனியா காந்திக்கு மனநிறைவு அளித்திருக்கிறது என்பதால் சோனியா காந்தி அரசியலில் இருந்து விடைபெறலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்

சோனியா காந்தியின் ஓய்வுத் திட்டமும் படிப்படியாகவே இருக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஏனென்றால், இன்னும் காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ கூட்டணிக்கு சோனியா காந்திதான் தலைவராக உள்ளார். 2024 மக்களவைத் தேர்தல் வரை சோனியா காந்தி தீவிர அரசியலில் இருக்கலாம், அதன்பின் படிப்படியாக விலகலாம். இருப்பினும் காங்கிரஸ் கட்சியோடு தொடர்பில் இருக்கும் வகையில் ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு நிரந்தர பதவி செயற்குழுவில் வழங்கப்படலாம்.
எப்படியாகினும் 2024ம் ஆண்டு தேர்தல் வரை சோனியா காந்தி தீவிரவாத அரசியலில் தொடர்வதற்கு வாய்ப்பு உள்ளது எனத் தெரிகிறது.
