Golden Langur Monkey: பாசப் போரட்டம்! காரில் அடிபட்டு இறந்த லங்கூர் தாய் குரங்கை எழுப்பிய குட்டிக் குரங்கு
சாலையில் வேகமாகச் சென்ற காரில் அடிபட்டு, கோல்டன் லங்கூர் தாய் குரங்கு இறந்துவிடவே, அதன் குட்டிகுரங்கு, தாய் இறந்தது தெரியாமல் அதை எழுப்பும் காட்சி காண்பவர்கள் மனதையும் கரைத்துவிடும்.
சாலையில் வேகமாகச் சென்ற காரில் அடிபட்டு, கோல்டன் லங்கூர் தாய் குரங்கு இறந்துவிடவே, அதன் குட்டிகுரங்கு, தாய் இறந்தது தெரியாமல் அதை எழுப்பும் காட்சி காண்பவர்கள் மனதையும் கரைத்துவிடும்.
அசாம் மாநிலத்தில் இந்த மனதை உருக்கும் நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அசாம் மாநிலத்தின் மேற்குப் பகுதியில், பூட்டான் மலைப்பகுதியில் மட்டும் கோல்டன் லங்கூர் என்ற அரிதான வகை குரங்கு வாழ்கிறது.
போங்கய்கோன் மாவட்டம், காகோஜியான் பகுதியில் நேற்று சாலையில் வேகமாகச் சென்ற கார் ஒன்று, இரை தேடி சாலையைக் கடக்க முயன்ற கோல்டன் லங்கூர் தாய்குரங்கு மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தாய்குரங்கு உயிரிழந்தது. தாயின் வயிற்றுப்பகுதியில் இருந்த 2 மாதக் குட்டிக் குரங்கு மட்டும் காயமின்றி தப்பித்தது.
24காரட் தங்க தோசை| வாங்குற விலைதான! அலைமோதும் கூட்டம் எங்கு தெரியுமா?
தனது தாய் இறந்துவிட்டது அறியாமல் குட்டிக் குரங்கு, தாய் குரங்கின் கன்னத்தோடு கன்னம் வைத்து கொஞ்சுவதும், அழுதுகொண்டே தாய் குரங்கை எழுப்பும் குட்டிக் குரங்கின் பாசப் போட்டாம் அங்கு நின்றிருந்த மக்களின் மனதை உருகச் செய்தது. அங்கிருந்த மக்கள் குட்டிக்குரங்கை விரட்டியும் தனது தாயைவிட்டு ஏறக்குறைய ஒரு மணிநேரமாகக் குட்டிக் குரங்கு செல்லவில்லை.
கடந்த 3 நாட்களில் கோல்டன் லங்கூர் குரங்கு வாகனத்தில் அடிபட்டு இறப்பது 2வது முறையாகும். கோக்ராஜ்ஹர் மாவட்டத்தில் உள்ள நாயேகான் பகுதியில் புதன்கிழமையன்று, ஆண் லங்கூர் குரங்குவாகனத்தில் அடிபட்டு இறந்தது.
வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில் “ தேசிய நெடுஞ்சாலை அமைக்க ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன, பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் உணவு தேடி குரங்குகள் சாலையைக் கடக்கின்றன. இதுபோன்ற இடங்களில் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் செல்ல தனிப்பாதை அமைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்
512 கிலோ வெங்காயம் விற்றதற்கு ரூ.2.49 காசு லாபம்: நொந்து கொண்ட மகாராஷ்டிரா விவசாயி
வனவிலங்குகளை புகைப்படம் எடுக்கும் கலைஞர் சன்ஜிப் கோகைன் போரா கூறுகையில் “ கோல்டன் லங்கூர் தாய் குரங்கை குட்டிக் குரங்கு எழுப்ப முயன்ற வீடியோ,புகைப்படம் மனதை உருக்குகிறது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மரங்கள் அடிக்கடி வெட்டப்படுவதால்தான் ,குரங்குகள் உணவுக்காக ஊருக்குள் வருகின்றன” எனத் தெரிவித்தார்