Golden Dosa: 24காரட் தங்க தோசை| வாங்குற விலைதான! அலைமோதும் கூட்டம் எங்கு தெரியுமா?
24 காரட்தங்கத்தில் செய்யப்பட்ட தோசை என்பதால் மக்கள் போட்டிபோட்டிக்கொண்டு வாங்கிச் செல்கிறார்கள், சாப்பிடுகிறார்கள். ஆனால், தங்க நகைபோன்று ரொம்ப காஸ்ட்லி இல்லீங்க. வாங்குற விலைதான்.
தங்கத்தில் நகை செய்து அணிவதை கேள்விப்பட்டிருக்கோம், தங்கத்தில் தோசை செய்து சாப்பிடுவதை எங்காவது பார்த்ததுண்டா!.
தங்கத் தோசை வாங்கும் விலைக்கு, 25 சாதாரண தோசைவாங்கிச் சாப்பிடலாம். இருந்தாலும் மக்களுக்கு ஆசைவிடலையே
ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கோல்ஸ் டெல்லி வந்தார்: பிரதமர் மோடியுடன் சந்திப்பில் முக்கிய உடன்பாடு
அதிலும் 24 காரட்தங்கத்தில் செய்யப்பட்ட தோசை என்பதால் மக்கள் போட்டிபோட்டிக்கொண்டு வாங்கிச் செல்கிறார்கள், சாப்பிடுகிறார்கள். ஆனால், தங்க நகைபோன்று ரொம்ப காஸ்ட்லி இல்லீங்க. வாங்குற விலைதான்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் ஹவுஸ் ஆப் தோசா ரெஸ்டாரன்ட்டில்தான் இந்த 24 காரட் தங்கத் தோசை ரெடியாகிறது. தோசையின் மீது 24 காரட் தங்கத்தை பூசித் தருகிறார்கள் என்பதால் மக்கள் அலோமோதுகிறார்கள்.
வழக்கமாக தோசை விலை ரூ.30 முதல் 150ரூபாய் வரை இருக்கும். ஆனால், இந்த தங்கத் தோசை விலை ரூ.1000 என விற்கப்படுகிறது. சுத்தமான 24 காரட் தங்கமுலாம் என்பதால், மக்கள் 1000 ரூபாய் கொடுத்து வாங்கிச் சாப்பிட தயங்கவில்லை.
தோசைக்கல்லில் தோசை வார்த்தபின், அதில் சுத்தமான 24 காரட் தங்கத்தை தடவுகிறார்கள், அது பறக்காமல் இருக்க நெய் ஊற்றப்படுகிறது. இந்த தோசை இந்த அளவு விலை வைப்பதற்கு காரணமே, அதன் மீது பூசப்படும் தங்க முலாம்தான். மற்றவகையில் வழக்கமான மாவு, நெய்தான் ஊற்றப்படுகிறது. இது தவிர தோசை மீது முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு துகள்கள் தூவப்படுகின்றன. நிலக்கடலை சட்னி, சாம்பார், பருப்பு சாம்பார், தோசைப்பொடி வழங்கப்படுகிறது.
சீன அதிபரைச் சந்திப்பேன்! புடினுடன் ‘நோ’:உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டம்
தங்கத் தோசை காஸ்ட்லி என்பதால் ஒரு வாடிக்கையாளர் ஆர்டர் செய்தால் மட்டுமே வழங்கப்படுகிறது. தினசரி குறைந்தபட்சம் 6 முதல் 7 தங்கத்தோசைகள் விற்பனையாகின்றன.தங்கத் தோசை மட்டுமின்றி, டபுள்டக்கர் பீ்ட்சா தோசை ரூ.300, உலர்பழங்கள் தோசை ரூ.170, பீட்சா தோசை ரூ.150, ரெட் சில்லி தோசை ரூ.70க்கு வழங்கப்படுகிறது.
2021ம் ஆண்டில் உலகிலேயே விலை உயர்ந்த உணவு என்பது நியூயார்க்கில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் விற்கப்பட்ட பிரெஞ்ச்சு பிரை-தான். இந்த பிரெஞ்ச்சு பிரை 200 டாலர் விற்பனையானது.