குடியரசுத்தலைவர், பிரதமர் நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
உலகம் முழுவதும் இன்று புத்தாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், புத்தாண்டை முன்னிட்டு குடியரசுத்தலைவர் பிரணாப் முகா்ஜி, பிரதமர் நரேந்திர மாேடி ஆகியாோ் நாட்டு மக்களுக்கு, தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மகத்துவம் மிக்க நமது நாட்டுக்கு இந்த புத்தாண்டு வளமும், வளர்ச்சியும் அளிக்கட்டும் என தொிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 2017-ம் ஆண்டின் துவக்கத்தையொட்டி மனமார்ந்த வாழ்த்துகள். நாட்டு மக்கள் அனைவரின் வாழ்க்கையிலும் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும், வளமும் பொங்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
