Asianet News TamilAsianet News Tamil

புதிய நாடாளுமன்றத்தில் சோழர்களின் செங்கோல் இருப்பது பெருமைக்குரிய விஷயம்: சத்குரு பாராட்டு

புதிய நாடாளுமன்றம் பண்டைய மற்றும் நவீன பாரதத்துக்குப் பொருத்தமானது என ஈஷா யோக மையத்தின் தலைவர் சத்குரு பாராட்டி இருக்கிறார்.

New Parliament - A Fitting Tribute To Best Of Ancient And Modern Bharat, Says Sadhguru
Author
First Published May 28, 2023, 5:50 PM IST

தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், கோவை ஈஷா யோகா மைய தலைவர் சத்குரு அதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றம் பண்டைய மற்றும் நவீன பாரதத்துக்கு பொருத்தமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் இதுகுறித்து பதிவிட்டிருக்கும் சத்குரு, "வலிமைமிக்க சோழர்களின் நிர்வாகச் சின்னமான செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவுவது, இந்த ஜனநாயகத்தின் மிகப் பெரிய பலத்தை, பலதரப்புகளை உள்ளடக்கிய தன்மை மற்றும் பன்முகத்தன்மையை நினைவூட்டுவதாக இருக்கும். இது ஒரு பெருமைக்குரிய விஷயம். வாழ்த்துக்கள்" என்றும் கூறியுள்ளார்.

75 ரூபாய் சிறப்பு நாணயம் வெளியீடு.. இதற்கு முன்பு எப்போதெல்லாம் சிறப்பு நாணயங்கள் வெளியிடப்பட்டது தெரியுமா?

எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கு மத்தியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடம் பல்வேறு நவீன வசதிகளைக் கொண்டதாக உருவாகியுள்ளது.

இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவில், பிரதமர் வரலாற்று சிறப்புமிக்க புனிதமான செங்கோலை மக்களவையில் சபாநாயகர் இருக்கை அருகே நிறுவினார். புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை நினைவுகூரும் வகையில் ரூ.75 நாணயம்  மற்றும் அஞ்சல் தலை ஆகியவற்றையும் பிரதமர் மோடி வெளியிட்டார். விழாவில் பேசும்போது, எதிர்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

எம்.பிக்களின் எண்ணிக்கை உயரும் : புதிய பாராளுமன்றத்தில் மோடியின் முதல் உரையில் இதை கவனிச்சீங்களா?

New Parliament - A Fitting Tribute To Best Of Ancient And Modern Bharat, Says Sadhguru

இதனிடையே, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை பற்றி ட்வீட் செய்த ராகுல் காந்தி, புதிய கட்டிட திறப்பு விழாவை பிரதமர் தனது முடிசூட்டு விழாவாக கருதுவதாகக் விமர்சித்தார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த ராகுல் காந்தியின் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட 20 கட்சிகள், திறப்பு விழாவைப் புறக்கணித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மக்கள் குரலை நசுக்கும் ஆணவம் பிடித்த மன்னன்! மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக ராகுல் காந்தி ட்வீட்

Follow Us:
Download App:
  • android
  • ios