75 ரூபாய் சிறப்பு நாணயம் வெளியீடு.. இதற்கு முன்பு எப்போதெல்லாம் சிறப்பு நாணயங்கள் வெளியிடப்பட்டது தெரியுமா?

குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை நினைவுகூரவும், புகழ்பெற்ற நபர்களை கௌரவிக்கவும் இந்திய அரசாங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறப்பு நாணயங்களை அறிமுகப்படுத்தியுள்ளது

75 rupees special coin release.. Do you know when special coins were released before this?

பிரதமர் நரேந்திர மோடி, இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவில், பிரதமர் வரலாற்று சிறப்புமிக்க "செங்கோலை" பாராளுமன்ற கட்டிடத்தில் நிறுவினார். புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை நினைவுகூரும் வகையில் ரூ.75 நாணயம் வெளியிடப்பட்டது. இந்த சிறப்பு நாணயத்தின் ஒரு பக்கத்தில் அசோக தூணின் லயன் கேபிடலும், அதன் கீழே "சத்யமேவ் ஜெயதே" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இடது பக்கத்தில் "பாரத்" என்ற வார்த்தை தேவநாகரி எழுத்திலும், வலதுபுறத்தில் "இந்தியா" என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது.

"சன்சாத் சங்குல்" என்ற வார்த்தைகள் தேவநாகரி எழுத்தில் மேல் சுற்றளவிலும், "Parliament Complex" என்று ஆங்கிலத்திலும் உள்ளது. நாணயம் 44 மில்லிமீட்டர் விட்டத்துடன் வட்ட வடிவில் இருக்கிறது. அதன் விளிம்புகளில் 200 வரிசைகளை கொண்டுள்ளது. 35 கிராம் நாணயம் 50% வெள்ளி, 40% செம்பு, 5% நிக்கல் மற்றும் 5% துத்தநாகம் ஆகியவற்றை உள்ளடக்கியது

ஆனால் சிறப்பு நாணயம் வெளியிடப்படுவது இது முதல்முறையல்ல. குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை நினைவுகூரவும், புகழ்பெற்ற நபர்களை கௌரவிக்கவும் இந்திய அரசாங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறப்பு நாணயங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க பல்வேறு நிகழ்வுகள் மற்றும் ஆளுமைகளை நினைவுகூரும் வகையில் சிறப்பு நாணயங்கள் வெளியிடப்பட்ட பல நிகழ்வுகளும் உள்ளன. இந்திய அரசாங்கம் சிறப்பு நாணயங்களை அறிமுகப்படுத்திய 4 நிகழ்வுகள்  குறித்து தற்போது பார்க்கலாம்.

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் : 

2019 ஆம் ஆண்டில், மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு, இந்திய அரசாங்கம் தேசத் தந்தைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஒரு சிறப்பு ₹150 நாணயத்தை வெளியிட்டது. அந்த நாணயத்தில் ஒருபுறம் மகாத்மா காந்தியின் உருவப்படமும், மறுபுறம் அசோக தூண் லயன் கேபிடல் பெற்றிருந்தன.

அன்னை தெரசாவின் பிறந்த நூற்றாண்டு:

2010 ஆம் ஆண்டு அன்னை தெரசாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய அரசாங்கம் ₹5 சிறப்பு நாணயத்தை வெளியிட்டது. இந்த நாணயத்தில் அன்னை தெரசாவின் உருவப்படமும், ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் 'அன்னை தெரசாவின் பிறந்த நூற்றாண்டு' என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.

தண்டி யாத்திரையின் 75வது ஆண்டு விழா

2005 ஆம் ஆண்டில், மகாத்மா காந்தி தலைமையிலான வரலாற்று தண்டி அணிவகுப்பின் 75 வது ஆண்டு நினைவாக, இந்திய அரசாங்கம் ₹5 நாணயத்தை வெளியிட்டது. நாணயத்தின் ஒருபுறம் உப்பு சத்தியாகிரக சின்னமும் மறுபுறம் அசோக தூண் லயன் கேபிட்டலும் இடம்பெற்றிருந்தன.

சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்தநாள்:

2013ல் சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு இந்திய அரசு ₹5 நாணயத்தை வெளியிட்டது. இந்த நாணயத்தில் சுவாமி விவேகானந்தரின் உருவப்படம், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் 'சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்தநாள்' என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios