Asianet News TamilAsianet News Tamil

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் வாகனங்களுக்கு,புதிய நம்பர் பிளேட்டுகள்!

New number plates for vehicles with additional security features
New number plates for vehicles with additional security features
Author
First Published Oct 17, 2017, 4:02 PM IST


நாட்டிலேயே முதன் முறையாக கர்நாடகாவில் வாகனங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ஒரே மாதிரியான புதிய நம்பர் பிளேட்டுகள் அறிமுகமாக உள்ளது.

கர்நாடகாவில் இரு சக்கர வாகனத் திருட்டு மற்றும் திருடப்பட்ட வாகனங்களை சட்ட விரோத காரியங்களுக்கு பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது.

கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக ரேவண்ணா சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து வாகன நம்பர் பிளேட்டுகளில் மாற்றங்கள் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு, புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கர்நாடகாவில் மொத்தம் 66 லட்சம் வாகனங்கள் உள்ளன. இதன் மூலமாக வாகன உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் அவரவர் விருப்பம் போல நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தும் போக்கு தடுக்கப்பட்டு, நாட்டிலேயே முதன்முறையாக அனைவருக்கும் ஒரே மாதிரியான புதிய நம்பர் பிளேட்டுகள் அறிமுகமாக உள்ளது. இதற்காக மாநிலப் போக்குவரத்துத்துறை சார்பாக புதிய ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன.

தற்பொழுது நம்பர் பிளேட்டுகளின் விலை குறைந்த பட்சமாக ரூ.1000 ஆக உள்ளது. ஆனால் புதிதாக அறிமுகமாக உள்ள நம்பர் பிளேட்டுகளின் விலை ரூ.1200 ஆக இருக்கும்.

இந்த நம்பர் பிளேட்டுகளின் சிறப்பம்சங்கள் வருமாறு:-

நம்பர் பிளேட்டுகளில் உள்ள எண்கள் வழக்கத்தினை விட பெரிய அளவில் இருக்கும்.இரவில் பயணம் செய்வோருக்கு உதவும் வகையில் பிளேட்டுகளில் பயன்படுத்தப்படும் வண்ணங்களில் ரேடியம் பூசப்பட்டிருக்கும்.

தனியார் வாகனங்கள், வாடகை வாகனங்கள் மற்றும் பேருந்துகளுக்கு என தனித்தனி எழுத்துருக்கள் பயன்படுத்தப்படும்.பிளேட்டுகளில் பயன்படுத்தப்படும் எழுத்துக்கள் 45 டிகிரி சாய்வான கோணத்திலும் பார்க்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

மேம்பட்ட பாதுகாப்புத்தன்மைக்கு என குரோமியம் ஹாலோகிராம் இதில் இணைத்து பயன்படுத்தப்பட்டிருக்கும்

மோட்டார் வாகனச் சட்டத்தின்படி இத்தகைய நம்பர் பிளேட்டுகள் மிகவும் பாதுகாப்பானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

பெங்களூருவில் சமீபத்தில் பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றினார்கள். ஆனால் அதிலிருந்து வாகனம் தொடர்பான தகவல்

கள் எதனையும் அவர்களால் பெற முடியவில்லை. இத்தகைய சூழ்நிலைகளுக்கு கர்நாடக அரசின் இந்த புதிய நம்பர் பிளேட்டுகள் முறை முடிவு கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios